இ - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இடு | வைத்தல் |
இடுக்கண் | துன்பம் |
இடுக்கி | உருண்டை வடிவ அல்லது பட்டை வடிவக் கம்பியைச் சம நீளத்தில் வளைத்து அல்லது இரண்டு கம்பிப் பட்டைகளை ஒரு முனையில் இணைத்து ஒரு பொருளை எடுப்பதற்கும் பிடித்துக்கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட கருவி |
இடுக்கி | கஞ்சத்தனமாக இருந்து பணத்தை மிச்சம் பிடிக்கும் நபர் |
இடுக்கு | (சுவர் முதலியவற்றில் )வெடிப்பு |
இடுக்கு | கஞ்சத்தனமாக இருந்து பணத்தை மிச்சம் பிடித்தல் |
இடுக்குப் பனை | நிறைய கள் வடியும் தன்மை உடைய பனை மரம் |
இடுகாடு | இறந்தவரைப் புதைக்கும் இடம் |
இடுகுறி | காரண அடிப்படை இல்லாமல் ஒரு பொருளுக்கு ஏற்பட்டு வழங்கும் பெயர் |
இடுங்கு | (கண் இயல்பான அளவில் இல்லாமல்) சுருங்குதல் |
இடுப்பு | தொப்புளுக்கு கீழும் அடி வயிற்றுக்கு மேலும் இரு பக்கமும் உள்ள வளைவான பகுதி, அரை, இடை,குறுக்கு |
இடுப்பு ஒடி | (ஒருவர் கடுமையான வேலை செய்வதால்) மிகுந்த களைப்பு ஏற்படுதல் |
இடுப்புவலி | குழந்தை பிறப்பதற்கு முன் கர்ப்பிணிக்கு உண்டாகும் வலி |
இடுபொருள் | பயிர் விளைவிப்பதற்காக நிலத்தில் இடும் (விதை, உரம்,பூச்சிமருந்து போன்ற)பொருள்கள் |
இடை | இடுப்பு,குறுக்கு |
இடைக்கட்டு | (பழங்கால வீடுகளில்)வீட்டின் நடுப்பகுதி,நடுக்கட்டு |
இடைக்கால உறுத்துக் கட்டளை | நிலுவையில் உள்ள மனு மீது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை மனுதாரரின் உரிமையைப் பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று தனி நபருக்கோ அரசுக்கோ நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு |
இடைக்காலத் தடை | சட்டத்தின் செயல்பாட்டையோ கீழ்நீதிமன்றத்தின் உத்தரவையோ மேல்முறையீடு முடியும்வரை நிறுத்திவைக்கும்படி மேல்நீதிமன்றம் பிறப்பிக்கும் தடை உத்தரவு |
இடைக்காலம் | 1.நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன் உள்ள நிலை,தற்காலிகம் 2.(அரசியல் இலக்கிய வரலாற்றில்) பண்டைக் காலத்துக்கும் தற்காலத்துக்கும் இடைப் பட்ட காலம் |
இடைக்கிடை | இடையிடையே,நடுநடுவே, அவ்வப்போது |