இ - வரிசை 49 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இணக்குதல்

தோட்டமொன்றை புதிதாக உருவாக்குதல், ஒன்றை உருவாக்குதல் அல்லது செய்தல்

இணங்கலர்

பகைவர்.

இணங்கல்

உடன்படுதல்.

இணங்கார்

பகைவர்.

இணங்கி

தோழி.

இணறு

பூ.

இணாப்புதல்

ஏய்த்தல்.

இணுக்குதல்

இசித்தல்.

இணுங்குதல்

இணுக்குதல்.

இணைக்குப்போதல்

இணையாகப்போதல்.

இணையாவினைக்கை

ஒற்றக்கை.

இணையெழுத்து

போலியெழுத்து.

இதமாகாரவிர்த்தி

இஃதெனிம் வடிவஞானம்.

இதமிப்பு

ஒன்றிப்பு.

இதரமதம்

புறசமயம்.

இதரயோகவிலச்சேதம்

பிரிநிலை.

இதழவிழ்தல்

மலரல்.

இதைப்புனம்

புதுக்கொல்லை.

இத்தியாதி

இதுமுதலானவை.

இத்துமம்

சமித்து.