இ - வரிசை 48 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இடையிடுதல் | ஊடேசம்பவித்தல். |
இடையிடை | இடைக்கிடை |
இடையிட்டுவண்ணம் | எதுகைத்தாது. |
இடையெண் | சிந்தடி, ஓரடியாக எட்டு வருவது. |
இடைஎழுஞ்சணி | பூரநாள். |
இடைவள்ளல் | கேட்டனகொடுப்போர். |
இடைவிடாமழை | ஓயாமழை. |
இடைவெட்டுப்பேச்சு | நிந்தனை. |
இஷ்டகாபதம் | வெள்வெட்டிவேர். |
இஷ்டி | யாகம். |
இட்டியம் | பாகம். |
இட்டிவனம் | ஒருசடங்கு. |
இட்டுக்கட்டிக்கொள்ளல் | குறைவாய்மதித்தல். |
இட்டுக்கட்டிப்பேசுதல் | இல்லாததைநியமித்துப்பேசுதல். |
இட்டொருசட்டு | இட்டம். |
இட்டோடல் | நீங்கல். |
இட்டோடுதல் | பிரிதல். |
இஷ்வாசம் | வில். |
இணக்கல் | உடன்படுதல். |
இணக்குதல் | உடன்படுதல். |