இ - வரிசை 47 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இடைச்சனி | பூரநாள். |
இடைச்சன் | இரண்டாம்பேறு, நடுமகன். |
இடைச்சீலை | திரைச்சீலை. |
இடைச்சேரி | இடையரூர். |
இடைச்சொற்பகாப்பதம் | ஒரு பகாப்பதம். |
இடைதரம் | இடைத்தரம். |
இடைதரம் | சாத்திலை, உள்ளிலை ஆகியவற்றிக்கு அடுத்த தரத்தில் இருக்கும் புகையிலை |
இடைத்தரம் | நடுத்தரம். |
இடைத்தொடர்க்குற்றுகரம் | ஒரு குற்றுகரம். |
இடைநடு | ஊடை. |
இடைநிலைப்பாட்டு | தாழிசை. |
இடைப்பக்கம் | ஒக்கல். |
இடைப்படல் | இடையிலுண்டாதல். |
இடைப்புழுதி | ஈரங்கலந்த புழுதி. |
இடைப்புள்ளி | இடைவரி. |
இடைப்பூட்டு | அரைப்பூட்டு. |
இடையறாவன்பு | முடியாவன்பு. |
இடையன் கால்வெள்ளி | ஒருவிண்மீன். |
இடையாந்தரம் | நடு. |
இடையாபரணம் | அரைப்பட்டிகை. |