இ - வரிசை 45 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இடலிப்பு

அகலம்.

இடவம்

பூமி.

இடவியது

அகலமுள்ளது.

இடறி

யானை.

இடறுகட்டை

தடைகாரன்.

இடனறிந்தொழுகல்

வணிய ரெண்குணத்தொன்று.

இடா

இறைகூட, ஒருபொறி
இடகலை

இடாடிமம்

தாதுமாதுளை.

இடாமுடாங்கு

எதிரிடை, எறுமாறு,ஒழுங்கின்மை.

இடிகரை

அழிந்தகரை

இடிகைபூமி

யானைவிழி.

இடிக்கொடியன்

இந்திரன்.

இடிசாமம்

கெடுகாலம், நிந்தை.

இடிப்பு

ஒலி
ஓசை
இடியேறு

இடிமம்

விங்கணவணி.

இடிமரம்

உலக்கை.

இடியப்பம்

ஒரு சிற்றுண்டி.

இடியேறு

இடி.

இடுகறல்

விறகு.

இடுகால்

பீர்க்கு.