இ - வரிசை 44 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இடக்கயம் | இடக்கியம். |
இடக்கையான் | அஞ்சாவீரன். |
இடங்கெட்டபாவி | ஆதரவற்றவன். |
இடசாரி | இடச்சுற்று. |
இடதந்தம் | இராசயானை. |
இடதானன் | கன்னன். |
இடத்திடல் | சொலித்தல். |
இடநாகம் | அடையிருக்கும் பாம்பு. |
இடந்தலைப்படல் | கூடல். |
இடந்தலைப்படுத்தல் | கூட்டுதல். |
இடபக்கொடியோன் | சிவபெருமான். |
இடபகவாகனன் | எருமைநாக்கி, சிவன். |
இடபாரூடன் | சிவன். |
இடப்பகுபதம் | ஒரு பகுபதம். |
இடப்பொருளிடைச் சொல் | இடப்பொருளைக்காட்டும் இடைச்சொற்கள்.அவை கண், கால்,கடை இடை முதலியன. |
இடமிடுதல் | பருத்தல். |
இடம்பரம் | இடப்பக்கம், வழிவகை. |
இடம்பல் | இடம்புதல். |
இடம்புரி | இடைக்கயிறு, இடம்புரிச்சங்கு, சங்கு |
இடம்மானம் | ஒரு பறை. |