இ - வரிசை 43 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இசைமுட்டி | செருந்தி. |
இசையுந்தொழிலர் | சூத்திரர். |
இசையுரிச்சொல் | ஓசையாலறியப்படுங் குணச்சொல் (உ-ம்)கலிகடல். |
இசையுள்ளான் | சிறந்தவன். |
இசையெஞ்சணி | இசையெச்சம். |
இசையெழுத்து | இசைக்குரிய எழுத்துக்கள். அவை சரிகமபதநி. |
இசைவல்லோர் | கந்தருவர், சங்கீத பாடகர். |
இசைவிரும்பி | அசுணம். |
இசைவுபிசகு | இணக்கமின்மை, இசகுபிசகு. |
இச்சயம் | ஆசை. |
இச்சலம் | நீர்க்கடம்பு. |
இச்சாநாசம் | நிராசை, விரக்தி. |
இச்சாபோகம் | இச்சித்த வனுபவம். |
இச்சாப்மியகம் | நானிச்சிக்கிறேன். |
இச்சாவசு | குபேரன். |
இச்சானிவிருத்தி | ஆசையடக்கம். |
இச்சியால் | இத்தி, இச்சி, கல்லிச்சி. |
இஞ்சிசோறு | இஞ்சியிலிருந்தெடுக்குஞ்சாறு. |
இஞ்சுச்சார் | வெல்லம். |
இடகலை | சந்திரகலை. |