இ - வரிசை 42 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இங்குமம் | இங்கு. |
இசடு | அசடு, பொருக்கு. |
இசப்கோல்விரை | இஸ்கோல்விரை. |
இசமான் | எசமான். |
இசலல் | இசலுதல். |
இசலாடல் | வாதாடுதல். |
இசலாட்டம் | இகலாட்டம். |
இசலுதல் | வாதாடல். |
இசலில் | கொன்றை. |
இசைகோள் | தாளம். |
இசைக்குதல் | சொல்லுதல். |
இசைக்குழல் | ஊதுகுழல். |
இடைத்திரிபு | இசையறுப்பு, வேறுபாடு. |
இசைநிறையேகாரம் | ஈற்றசையேகாரம். |
இசைந்தவேளை | தற்சமயம். |
இசைப்பாட்டு | இராகம். |
இசைப்பாமுகநிலை | கொச்சகம். |
இசைப்பெருந்தானம் | இசை, பிறக்குமிடம். |
இசைமடந்தை | சரச்சுவதி. |
இசைமுடி | சிலந்திநாயகம். |