இ - வரிசை 41 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இகாசம் | பழிகூறல். |
இகுசு | மூங்கில். |
இகுப்பம் | திரட்சி. |
இகுப்பு | வாசிப்பு. |
இகுளி | இடியேறு, கொன்றை. |
இக்கவம் | கரும்பு. |
இக்கணி | இப்போது. |
இக்கா | கொட்டாவி. |
இக்கிடைஞல் | இக்கட்டு. |
இக்கியந்திரம் | கரும்பாட்டுமாலை. |
இக்கிரசம் | கருப்பஞ்சாறு. |
இக்குவிகாரம் | சருக்கரை. |
இங்கஞ்செடி | முத்தாபலச்செடி. |
இங்கண் | இவ்விடம் |
இங்கரி | கஸ்தூரி. |
இங்காலம் | கரி. |
இங்கிதக்காரன் | இன்சொற் சொல்வோன். |
இங்குணம் | ஒருமரம். |
இங்குதாதி | பீதரோகிணி. |
இங்குதி | ஒருமரம். |