இ - வரிசை 40 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இட்டிய | சிறிய. (ஐங்குறு.215). |
இடவிய | விசாலமுள்ள. இடவிய வறை நின்று (தணிகைப்பு.வீராட்.65). |
இப்படிக்கொத்த | இத்தன்மையான. |
இப்படிக்கொத்த | அத்தகைய (கெட்ட) தன்மைகள் கொண்ட |
இப்பேர்ப்பட்ட | இத்தன்மையதான. |
இதவிய | நன்மையான. இதவிய புல்லு மிட்டேம் (திருவாலவா. 29,6). |
இன்றிய | இல்லாத. தரித்தரலின்றியவிவற்றை (பெருங். மகத. 14, 214). |
இனை | இன்ன. இனைத்துணைத்து (குறள், 87). |
இத்தண்ட | இத்தனை |
இடைவழி | மார்க்கத்தின் மத்தியம். (திவ்.பெரியாழ்.4,5,5). |
இகரக்குறுக்கம் | குற்றியலிகரம். |
இகலார் | பகைவர். |
இகலுதல் | இகலல். |
இகலோர் | பகைவர். |
இகல்வு | எதிரிடை, இகலுதல். |
இகவு | இகழ்ச்சி. |
இகழ்ச்சிக்குறிப்பு | இகழ்ச்சியைக்காட்டவருஞ்்சொற்கள். அவை இளி,எல், எவன், எற்று, என், என்னே,ஏயே, சீச்சீ, சை என்பன. |
இகழ்ச்சிச்சொல் | அங்கதச்சொல், இழிமொழி. |
இகழ்ச்சிபுகழ்ச்சி | புகழ்மொழியால் இகழ்தல் (உ-ம்) பேகாளி. |
இகழ்வு | நிந்தை |