இ - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இடர்

இடையூறு
துன்பம்
வறுமை

இடர்நிதி

பிந்தங்கிய பிரதேசங்களில் பணிபுரிபவர்களுக்கு அரசு வழங்கும் படி

இடர்பாடு

இடையூறுக்கு உள்ளான நிலை, துன்பத்துக்கு உள்ளான நிலை

இடவலமாக

(வட்டப்பாதையில் சுற்றுவதைக் குறிக்கும்போது) இடதுபுறத்தில் தொடங்கி வலதுபுறத்தில் முடிவதாக,பிரதட்சிணமாக

இடவல மாற்றம்

(கண்ணாடி போன்றவற்றில்) இடப்பக்கம் இருப்பது வலப்பக்கமாகவும் வலப்பக்கம் இருப்பது இடப்பக்கமாகவும் தெரியும் நிலை

இடறு

தடுமாறுதல்,தடுமாறச் செய்தல், தட்டிவிடுதல்
கால் தடுக்கு
துன்புறு
எற்று
உதைத்துத் தள்ளு
எல்லை மீறு
தடுத்தல் செய்
புண்படுத்து [இடறுதல்]

இடாப்பு

பதிவேடு

இடி

மழைகாலத்தில் வானத்தில் கேட்கும் மின்னலுடன் கூடிய பேரொலி
உடைதல்
தகர்த்தல்
மோதுதல்
குத்துதல்

இடித்த புளி மாதிரி

உணர்ச்சியே இல்லாமல்,அசைவற்று

இடித்துக்காட்டு

குத்திக்காட்டுதல்

இடித்துரை

(அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு) கண்டித்தல்
கழறிக் கூறுதல்
தவறுகளை எடுத்துரைத்தல்

இடிதாங்கி

(மின்னல் தாக்கிச் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உயரமான கட்டடங்களில் வைத்திருக்கும்) மின்னலின் மின்சக்தியை தரைக்குக் கொண்டுசெல்லும் பாதுகாப்பு அமைப்பு
ட்டிடத்தின் மீது மின்னல் தாக்காமல் காக்கும் உலோகக் கம்பி

இடிந்துபோ

(காதைக் குறித்துவரும் போது)செவிடாகப்போதல்

இடிபடு

1.(மோதுதல்,அதிர்தல் போன்றவற்றால் கட்டடம் ,பாலம் முதலியவை )தகர்ந்து போதல் அல்லது சிதைதல் 2.ஒருவரோடு ஒருவர் அல்லது ஒன்றோடு மோதுதல் 3.(தானியம் மாவாக்கப்படுதல்

இடிபாடு

(கட்டடம் ,வாகனம் போன்றவை) தகர்ந்து விழுந்த நிலை,சிதைவு

இடிமயிர்

சவுரி

இடியன் துவக்கு

நாட்டுத்துப்பாக்கி

இடியாப்ப உரல்

இடியாப்பம் பிழியப் பயன்படுத்தும் அச்சு

இடியாப்பம்

அரிசி மாவை அச்சில் இட்டு நூல்போல் பிழிந்து ஆவியில் வேகவைத்து தயரிக்கும் உணவுப் பண்டம்

இடிவிழு

(பூமியில் ஓரிடத்தில்)மின்னல் ஒலியுடன் சேர்ந்து இறங்குதல்