இ - வரிசை 39 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இறாட்டணம் | இராட்டினம். |
இறாட்டுப்பிறாட்டு | ஏதடை, சச்சரவு. |
இறுகங்கியான் | கையாந்தகரை. |
இறும்பல் | அதிசயம். |
இறும்பி | எறும்பு. |
இறைஞ்சி | மரவுரி. |
இற்றை | இன்று |
இனைத்து | இத்தனமைத்து. |
இன்னாது | தீது. |
இன்னினி | இப்பொழுது. |
இந்திரன் | தேவர்கோன் |
இந்திரை | திருமகள், அரிதாரம், இந்திராணி |
இந்துசேகரன் | சிவபெருமான் |
இரகு | சூரியவமிசதரசருள் புகழ்பெற்ற ஓர் அரசன் |
இரேசன் | அரசன், வாணன், திருமால் |
இரேவதன் | பலதேவன் மாமன் |
இருவாம் | நாமிருவரும். இருவாமையனையேத்துவாம் (கலித். 43). |
இதா | இதோ. மற்றிதா தோன்றுகின்ற (சீவக.1232). |
இந்தோ | இதோ |
இத்திஹாத்தான | ஏகோபித்த. இவ்விஷ்யத்தில் ஆலிம்களுக்குள் இத்திஹாத்தன அபிப்பிராயம் இருக்கிறது. |