இ - வரிசை 38 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இலாகன்

ஒருமீன்.

இலாக்கிரி

செம்மெழுகு.

இலாக்கை

ஈர்.

இலாங்கூலம்

விலங்கின் வால்

இலாபாதேவி

இலாவாதேவி.

இலிகுசம்

எலுமிச்சை.

இலீக்கை

ஈர், நமடு.

இலுதை

அணில்.

இலேசுணம்

அரிதாரம்.

இலேந்து

கல்லுப்பு.

இலேம்புகம்

நீலக்கடம்பு.

இலைச்சுருளி

ஒருபூண்டு.

இவக்காண்

இங்கே. இவக்காணென் மேனி பசப்பூர்வது (குறள், 1185)
இப்பொழுது இவ்விடம்.

இவண்

இவ்விடம்
இம்மை

இவவு

இழிவு.

இவுளி

குதிரை.

இவ்

இவை. இவ்வே பீலியணிந்து (புறநா. 95).

இவ்விரண்டு

இரண்டிரண்டு.

இறங்கர்

குடம்.

இறா

இறால்.