இ - வரிசை 37 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இருவேலி | வெட்டிவேர். |
இரெட்டி | ஒருசாதி. |
இரெப்பை | கண்மடல். |
இரேகுத்தி | ஓரிராகம். |
இரேசகி | கடுக்காய் |
இரேசுதல் | அசீரணம், அந்திப்பு. |
இரேணு | அணு, அழகு. |
இரேணுகம் | அரேணுகம், ஒரு மருந்து. |
இரேயம் | கள். |
இலகம் | ஊமத்தை. |
இலகான் | கடிவாளம். |
இலகுசம் | ஈரப்பலா, இலாமிச்சு. |
இலக்காரம் | சீலை. |
இலக்குமணை | சாரசபட்சியின் பேடு. |
இலங்கிசார் | அலைக்கழிவு, இடைஞ்சல். |
இலட்சுமணம் | ஓர்மரம், தாளி. |
இலணை | அரசமரம். |
இலம்பிகை | அண்ணாக்கு. |
இலலாடம் | நெற்றி. |
இலவலேசம் | மிகச்சிறிது. |