இ - வரிசை 34 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இட்டுறுதி

ஆபத்காலவுதவி, கண்டிதம்.

இட்டோடு

பிரிவு.

இணாப்பு

ஏய்ப்பு.

இதழி

கொன்றை மரம்

இத்திநடையம்

நத்தை.

இத்து

காவட்டம்புல்.

இந்தா

இதோ. (சீவக.1232, உரை).
(pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.)
இங்கே வா என்னுங் குறிப்புமொழி.
இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி. இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து..தேவிகையிலீந்தனனே (கந்தபு.வள்ளி.35).
இங்கேவா
இதை வாங்கிக் கொள் என்று பொருள்படும் குறிப்பு மொழி

இந்தா

இதைப்பிடி, மிக சொற்ப நேரத்தில் ஒன்று நிகழும் என்ற குறிப்பு

இந்திகோபம்

ஈயம்.

இந்திரகம்

சங்கமண்டபம்.

இந்திரகீலம்

மந்தரமலை.

இந்திரபம்

பாலை, வெட்பாலை.

இந்திரபுஷ்பம்

வெந்தோன்றி.

இந்தீவரம்

விஷ்ணு.

இந்துள்

நெல்லி.

இந்தோளம்

ஊசல்
ஓரிராகம்
(மாலையில் பாடத்தக்க) ஓர் இராகம்

இபவ

விபவ.

இப்பி

சங்கு
சிப்பி

இம்மடி

யானை.

இயமான்

எசமான்.