இ - வரிசை 33 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இசலி

கபதம்.

இசுதாரு

கடப்பமரம்.

இச்சி

இத்தீமரம்.

இச்சியல்

கடுகுரோகிணி.

இஞ்சாகம்

இறால்மீன்.

இடக்கியம்

தேர்க்கொடி.

இடங்கணி

ஆந்தை, உளி, சங்கிலி.

இடங்கரம்

மகளிர் சூதகம்.

இடவகை

வீடு.

இடவை

வழி.

இடற்சம்

குக்கில்.

இடாகு

புள்ளி.

இடாம்பீகன்

இடம்பன்.

இடிஞ்சில்

அகல்.

இடுகு

ஒடுக்கம்.

இடோலி

ஒருவகைச்சிவிகை.

இடோல்

ஒருபறை.

இட்டடை

இட்டிடை, கடைச்சல்மரம்.

இட்டிகை

இடுக்குவழி
கூட்டு மெழுகு
செங்கல்
பலி பீடம்

இட்டிடைஞ்சல்

இட்டறுதி, முட்டு.