இ - வரிசை 31 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இனக்கவர்ச்சி | (ஆணுக்கு பெண் மீதும் ,பெண்ணுக்கு ஆண் மீதும்)பாலுணர்வு அடிப்படையில் ஏற்படும் விருப்பம் |
இனக்கீற்று | (உயிரிகளின்)குணம் ,அமைப்பு முதலியவற்றை நிர்ணயிப்பதாக அமைவதும் உயிரணுவில் காணப்படுவதுமான கூறு |
இனக்கூறை | திருமணத்துக்குப் பின் மணமகன் மணமகளுக்குத் தரும் கூறைப் புடவை |
இனச்சேர்க்கை | (விலங்குகளைக் குறித்துக் கூறும்போது)இணைசேர்தல், (தாவரங்களைக் குறித்துக் கூறும்போது)மகரந்தச் சேர்க்கை |
இனசனம் | (ஒருவரின்)உறவினர்களும் சாதியைச் சேர்ந்தவர்களும் |
இனப்படுகொலை | ஓர் இனத்தவர் திட்டமிட்டு மற்றோர் இனத்தை அழிக்கும் போக்கு |
இனப்பெருக்கம் | உலகில் தங்கள் இனம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக மனிதன் குழந்தைகளையும் ,விலங்குகள் குட்டிகளையும்,பறவைகள் குஞ்சுகளையும் மற்ற உயிரிகள் சிறு உயிரிகளையும் தாவரங்கள் விதைகள் அல்லது சிறு செடிகளையும் உருவாக்குதல் |
இனம் | ஒரே வகையைச் சேர்ந்த பலவற்றை உள்ளடக்கிய பிரிவு |
இனம் | உறவு, சொந்தம் |
இனம்காட்டு | (யார்,எது,என்ன என்பதற்கான) அடையாளத்தை வெளிப்படுத்துதல் |
இனம்காண் | (இன்னார்,இன்னது என்பதை)அடையாளம் தெரிந்து கொள்ளுதல் |
இனம்தெரியாத | (அறிவுபூர்வமாக) விளக்க முடியாத,காரணம் கூற முடியாத |
இனமுறை | உறவு ,சொந்தம் |
இனமையவாதம் | தான் சார்ந்திருக்கும் இனம்,மொழி,பண்பாடு போன்றவை பிறருடையதைவிட உயர்வானவை என்று நம்பும் போக்கு |
இனவரைவியல் | மனிதர்களின் வெவ்வேறு இனங்கள், பண்பாடுகள் பற்றி விவரிக்கும் துறை |
இனவியல் | மனிதர்களின் வெவ்வேறு இனங்கள்,பண்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி ஆராயும் துறை |
இனவிருத்தி | இனப்பெருக்கம் |
இனவெறி | மனித இனத்தில் சில இனத்தவர் தம் இனமே உயர்வானது என்று நிலை நாட்டும் தீவிரப் போக்கு |
இனாம் | இலவசம் |
இனாம் | மாப்பிள்ளையின் பெற்றோருக்கு பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு முன் கொடுக்கும் பண நன்கொடை |