இ - வரிசை 30 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இன்பியல் | (நாடகம்,புதினம்,திரைப்படம் முதலானவற்றில்)மகிழ்ச்சியான முடிவு |
இன்புறு | மகிழ்ச்சி அடைதல் |
இன்மை | (ஒன்று)இல்லாதிருக்கும் நிலை |
இன்றி | இல்லாமல் |
இன்றியமையாத | தவிர்க்க இயலாத,(மிகவும்)அவசியமான |
இன்றியமையாமை | தவிர்க்க முடியாத தன்மை |
இன்று | இப்பொழுது நடக்கும் நாள் |
இன்றைய | 1.இந்த நாளினுடைய 2.இந்த காலத்தில் இருக்கிற,இந்த காலத்தினுடைய |
இன்றைய தேதிக்கு | (பேசப்படும் ) காலப்பொழுதில் |
இன்ன | இந்த ,இப்படிப்பட்ட |
இன்னது | இந்த தன்மை உடையது,இப்படிப்பட்டது |
இன்ன பிற | (ஒரு தொகுப்பாகக் கூறப்பட்டவை மட்டும் அல்லாமல்) இவை போன்ற பிற |
இன்ன பிறர் | (ஒரு தொகுப்பாகக் கூறப்பட்டவர்கள் மட்டும் அல்லாமல்)இவர்கள் போன்ற பிறர் |
இன்னமும் | இதுவரையிலும்,இன்னும்,மேலும்,இப்பொழுதும் |
இன்னல் | (துன்பம் மிகுந்த)தொல்லை |
இன்னார் | குறிப்பிட்ட நபர் |
இன்னிசை | எளிமையான சங்கேத வகை,மெல்லிசை |
இன்னும் | இதுவரை,மேலும் ,கூடுதலாக,இப்போதும் |
இன்னொரு | மற்றொரு,மேலும் ஒரு ,மீண்டும் ஒரு |
இன்னோரன்ன | இது போன்ற |