இ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இட்டுமுட்டு | இடவசதிக்குறைவு |
இட்லி | அரிசி மாவையும் உளுந்து மாவையும் (குறிப்பிட்ட விகிதத்தில்) கலந்து குழிவுடைய தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம் |
இட்லி அரிசி | இட்லி, தோசை, அடை போன்றவற்றுக்கு பயன்படுத்தும் புழுங்கலரிசி |
இட்லித்தட்டு | இட்லி அவிப்பதற்கு ஏற்றதாக அமைத்த குழிவுகளை உடைய தட்டு |
இட்லிப்பானை | ஒன்றன் மேல் ஒன்றாக இட்லித்தட்டுகளை வைக்கும்படியான அமைப்பையும் மூடியையும் கொண்ட பாத்திரம் |
இடஒதுக்கீடு | (அரசின் கணிப்பில்)சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிந்தங்கியிருப்பதாகக் கருதப்படும் வகுப்பினருக்கும், ஊனமுற்றோர் முன்னால் இராணுவத்தினர் போன்றோருக்கும் கல்வி,வேலை வாய்ப்பு முதலியவற்றில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அரசு ஒதுக்கீடு செய்யும் ஏற்பாடு |
இடக்கரடக்கல் | நாகரிகமாக இருக்காஅது என்பதால் சில சொற்களைத் தவிர்த்து அவை சுட்டும் பொருளை வேறு வழியில் மறைமுகமாகக் குறிப்பிடுதல் |
இடக்கு | 1.(செய்துகொண்டிருக்கும் ஒன்றைச் செய்ய மறுக்கும்)முரண்டு,சண்டித்தனம் 2.(பேச்சில்)குதர்க்கம்,ஏறுக்குமாறு |
இடக்குமடக்காக | (பேசுதல், கேள்வி கேட்டல் போன்றவற்றைக் குறிக்கும் வினைகளுடன்)குதர்க்கமாக அல்லது விதண்டாவாதமாக |
இடக்கை | இடதுகை |
இடது | (பெரும்பாலும் பெயரடையாக) ஒருவர் கிழக்குப் பக்கம் பார்த்து நிற்கும் போது அவர் உடலில் வடக்குத் திசையை நோக்கி இருக்கும் பக்கம் |
இடதுசாரி | தொழிலாளர் வர்க்க உரிமைகளையும் பொதுவுடைமைத் தத்துவங்களையும் ஆதரிக்கும் போக்கு/அந்தப் போக்கை கொள்கையாகக் கொண்டிருப்பவர் |
இடப்பெயர்ச்சி | விசையின் காரணமாக ஒரு பொருள் நகர்வதால் அடையும் இடமாற்றம் |
இடம் | (ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் |
இடம்கொடு | (கண்டிப்புக் காட்டவேண்டிய நபரை)கட்டுப்பாடு இல்லாமல் இருக்கவிடுதல் |
இடம்பெயர் | 1.(மனிதர்கள்)நெடுங்காலமாக வசித்து வந்த இடத்தை விட்டுப் புதிய இடத்துக்குச் செல்லுதல்,புலம்பெயர்தல் 2. (பறவைகள்,விலங்குகள்) வலசை போதல் 3.(ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவை)இருந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் செல்லுதல் |
இடம்பெறு | (குழுவில்,பட்டியலில்,நிகழ்ச்சியில் அல்லது காட்சிக்காக) சேர்க்கப்படுதல் |
இடம் பொருள் ஏவல் | (ஒன்றைச் செய்வதற்கான) உகந்த சூழல் |
இடமதிப்பு | ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணில் குறிப்பிட்ட ஒரு இலக்கம் இருக்கும் இடத்தைப் பொறுத்து அது பெறும் மதிப்பு |
இடமாற்றம் | மாற்றல் |