இ - வரிசை 29 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இறுதித் தீர்ப்பு | தீர்ப்புநாள், (சில மதக் கொள்கைகளில்)உலகத்தின் இறுதியில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய நல்ல அல்லது தீய செயல்களுக்கு ஏற்ற சன்மானத்தை அல்லது தண்டனையை இறைவன் தருவார் என்று நம்பப்படும் நாள் |
இறுதி மரியாதை | (பொதுவாக)பிரபலமானவரின் அந்திமச் சடங்கின் போது செலுத்தும் அஞ்சலி |
இறுதியாக | ஒன்றை முடிக்கும் வகையில்,கடைசியாக,இறுதியில் |
இறும்பூது எய்து | பெருமிதம் அடைதல் |
இறுமா | கர்வம் அடைதல் |
இறுமாப்பு | செருக்கு |
இறை | கடவுள் |
இறை | அடி விரல்களின் இடையில் இருக்கும் பகுதி |
இறைச் சமூகம் | திருச்சபை |
இறைச்சி | உணவாகும்(ஒருசில விலங்குகளின்,பறவைகளில்,மீன்களின்)சதைப் பகுதி,கறி (பழந்தமிழ் இலக்கியத்தில்)வெளிப்படையாகக் கூறப்படாமல் உணர்த்தப்படும் பொருள் |
இறைச்சிக்கூடம் | (நகராட்சி அங்கீகாரம் பெற்று)ஆடு ,மாடு போன்றவற்றைச் சுகாதாரமான முறையில் இறைச்சிக்காக வெட்டுவதற்கான இடம் |
இறைஞ்சு | கெஞ்சுதல்,மன்றாடுதல் |
இறைத்தூதர் | மக்களுக்கு இறை நெறியை அறிவுறுத்த இறைவனால் அனுப்பப்படும் புனிதர் |
இறைமை | தெய்வீகம் ,கடவுள் தன்மை |
இறையாண்மை | ஒரு நாடு முழுச் சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் தன் செயல்பாடுகளை நிர்வகித்துக் கொள்ளும் நிலை |
இறையியல் | கடவுள் என்ற தத்துவத்தையும் இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மதம் ஆகியவற்றையும் குறித்ததுறை |
இறைவன் | கடவுள்,ஆண்டவன் |
இறைவி | பெண் தெய்வம்,அம்பிகை,அம்பாள் |
இன் | (சிலவகைக் கூட்டுச்சொற்களோடு) இனிய (எ.கா. இன்சுவை) |
இன்பம் | புலன்களுக்கும் மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு,மகிழ்ச்சி |