இ - வரிசை 28 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இறங்கு | மேலிருந்து கீழே வருதல் |
இறங்கு துறை | நீர்நிலைகளில் கப்பல்,படகு முதலியன வந்து நிற்பதற்காகக் கட்டப்பட்ட அமைப்பு |
இறங்குமுகம் | (வியாபாரம் விலை முதலியவை)தற்போதைய நிலையிலிருந்து சரியும் நிலை |
இறங்கு வரிசை | எண்களில் பெரிய எண்ணில் இருந்து சிறிய எண்ணை அடையும் வரிசை |
இறந்தகாலம் | ஒரு செயல் நடந்து முடிந்த காலம் |
இறந்துபடு | சாதல் ,இறத்தல் |
இறப்பு | சாவு,மரணம் |
இறவாணம் | கூரையின் உட்பக்கத்தின் கீழ்ப்பகுதி |
இறவாமை | மரணம் இல்லாத நிலை |
இறாஞ்சு | (பருந்து போன்ற பறவை தன் இரையை)வேகமாக வந்து தாக்குதல் |
இறால் | மெல்லிய ஓடுபோன்ற மேல் புறத்தை உடைய(உணவாகும்) நீர்வாழ் உயிரினம் |
இறுக்கம் | நெகிழ்வோ,தொய்வோ இடைவெளியோ இல்லாத தன்மை,அழுத்தம்,உறுதி |
இறுக்கம் | பணப்பற்றாக்குறை, சிக்கன தன்மை |
இறுக்கு | (நெகிழ்வோ தொய்வோ இல்லாமல் ஒன்றை அல்லது ஒருவர பிடித்து பலமாக)அழுத்துதல் |
இறுக | (இடைவெளி இல்லாமல் ஒன்றை)அழுத்தமாக |
இறுகு | (நெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாமல்)அழுத்தமாக இருத்தல் |
இறுதி | முடிவு,கடைசி |
இறுதி ஊர்வலம் | இறந்தவரின் உடலைத் தக்க மரியாதையுடன் ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்துச் செல்லுதல் |
இறுதிச் சடங்கு | இறந்துபோன ஒருவரை அடக்கம் அல்லது தகனம் செய்யும்வரை சம்பிரதாயப்படி பின்பற்றப்படும் முறைமைகள்,ஈமக்கிரியை |
இறுதிசெய் | (திட்டம்,உடன்பாடு முதலியவை குறித்து)தீர்மானமான முடிவுக்கு வருதல் |