இ - வரிசை 27 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இளி | அர்த்தம் இல்லாமல் பல்லைக் காட்டிச் சிரித்தல் |
இளிச்சவாயன் | எளிதில் ஏமாற்றப்படக்கூடிய ஒருவன் |
இளிப்பு | அர்த்தமற்ற சிரிப்பு |
இளை | (உடல்)மெலிதல் |
இளைஞன் | இளமைப் பருவத்தில் இருக்கும் ஒருவன்,வாலிபன் |
இளைப்பாற்றுச் சம்பளம் | ஓய்வூதியம் |
இளைப்பாறு | (களைப்பைப் போக்க )ஓய்வெடுத்தல் |
இளைப்பு | இரைப்பு |
இளைய | பின்னால் பிறந்த,வயதுகுறைந்த |
இளையபட்டம் | (பெரும்பாலும் சைவ மடங்களில்)அடுத்த மடாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் பட்டம் |
இளையாள் | ஒருவருடைய மனைவிகளுல் இளையவள் |
இற்றவரை | இன்றுவரை |
இற | (மனிதர்களும் விலங்குகளும் ) சாதல் |
இறக்கம் | 1.கீழ் நோக்கிய சரிவு 2.(பொருள்களின் விலை)சரிவு |
இறக்கு | உயரத்திலிருந்து அல்லது இருந்த இடத்திலிருந்து கீழே கொண்டு வருதல் |
இறக்குமதி | (வெளிநாட்டிலிருந்து பொருள்களை)பெறும் அல்லது வரவழைக்கும் நடவடிக்கை |
இறக்கை | (பறவைகளின்) சிறகு,இறகு |
இறகு | மெல்லிய தண்டின் இருபுறமுன் நெருக்கமான மிருதுவான இழைகளைக் கொண்ட இறக்கையின் தனிப்பகுதி |
இறகுப்பந்து | (விளையாட்டில் மட்டையால் அடிப்பதற்கான )அடிப்பகுதி உருண்டையாகவும்மேற்பகுது பூப்போன்று விரிந்தும் இருக்கும் ஒரு வகைப் பந்து/மேற்குறிப்பிட்ட பந்தைக் கொண்டு விளையாடும் விளையாட்டு |
இறங்கிவா | (சமரசமாகும் நோக்கத்தோடு)விட்டுக்கொடுத்தல் |