இ - வரிசை 26 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இளஞ்சார்வு

(பனை மரத்தின்) குருத்து ஓலை

இளஞ்சார்வு

பன்ன வேலைக்கு சிறந்ததான குருத்துப் பனையோலை

இளந்தாரி

இளைஞன்

இளந்தாரி

வாலிபன், திடகாத்திரமான வாலிபன்

இளநரை

(ஒருவருக்கு) மிக இளம் வயதிலேயே தோன்றும் நரை முடி

இளநிலை

(பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில்)தொடக்க நிலை

இளநீர்

1.இனிப்பான நீரும் முற்றாத பருப்பும் கொண்ட மட்டை உரிக்காத தேங்காய் 2.இளம் தேங்காயின் நீர்

இளப்பம்

மற்றவர்களால் ஏளனமாகப் பார்க்கப்படும் நிலை,இளக்காரம்

இளம்

1.இளமையான,சிறுவயதுடைய 2.(தாவரங்களைக் குறிப்பிடப்படும்போது)வளரத்தொடங்கியுள்ள,முதிராத 3.(ஒரு துறையில் )முன்னேறிவருகிற அல்லது ஆரம்ப நிலையில் இருக்கிற 4.(நிறத்தைக் குறிப்பிடும்போது)வெளிர் 5. (ஒன்றின் தன்மையை குறிப்பிடும்போது)மென்மையான, மிதமான

இளம்பிள்ளைவாதம்

இளம் குழந்தைகளின் கைகால்களில் உள்ள தசைகளின் வளர்ச்சியைப் பாதித்து அவை இயங்கும் சக்தியை இழக்கச் செய்யும் ஒரு வகைத் தொற்று நோய்

இளமானி

இளங்கலை

இளமை

இள வயதும் அந்த வயதுக்குரிய தன்மையும்

இளரத்தம்

1.விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் துணிச்சலுடன் எதையும் செய்ய முயலும் இளம் வயது 2.விளைவுகளை எண்ணிப் பார்க்காத துணிச்சலான இளைஞர்

இளவட்டம்

இளைஞர்களைப் பொதுவாகக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்

இளவயதினர்

பதின்பருவத்தினர்

இளவரசன்

அரச குடும்பத்தில் பிறந்து அரசனாகும் உரிமை பெற்ற ஆண்

இளவரசி

அரச குடும்பத்தில் பிறந்தவர்

இளவல்

தம்பி

இளவாளி

நமுத்தல்

இளவேனில்

கோடைகாலத்தின் தொடக்கங்களான பங்குனி சித்திரை மாதங்கள்