இ - வரிசை 25 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இழுப்பறை | மேசை, அலமாரி போன்றவற்றில்) வெளியே இழுக்கக்கூடிய முறையில் உள்ள மேல்புறம் திறந்திருக்கும் பெட்டி |
இழுப்பாட்டம் | நிச்சயமற்ற நிலை,இழுபறி |
இழுப்பு | 1.இழுத்தல் 2.வலிப்பு(நோய்) |
இழுபறி | முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியாத நிலை, நிச்சயமற்ற நிலை |
இழுவல் | இழுபறி(நிலை) |
இழுவை ரயில் | மலைப்பகுதிகளில் சுமையை இழுத்துச் செல்லப் பயன்படும் இரண்டு கம்பிகளின் வழியே நகரும் வாகனம் |
இழை | (ஒன்று) உணரத்தக்க முறையில் வெளிப்படுதல் |
இழைக்கட்டு | வேண்டிக்கொண்ட காரியம் நிறைவேறுவதற்காகக் கோயிலுக்குச் சென்று கையில் கயிறு கட்டிக் கொள்ளுதல் |
இழைக்கயிறு | (பந்தல் ,சாரம் போன்றவை கட்டப் பயன்படும்)தேங்காய் நாரை முறுக்கித் தயாரிக்கும் மெல்லிய கயிறு |
இழைப்புளி | மரச்சட்டம் ,பலகை போன்றவற்றைச் சமமாகவும் வழவழப்பாகவும் ஆக்குவதற்கு பயன்படுத்தும் கூரிய உளித்தகடு நடுப்பகுதியில் செருகப்பட்ட தச்சர் கருவி |
இழையோடு | 1.(ஒரு செய்தி அல்லது உணர்வு ஒன்றின் பின்புலத்தில்)ஊடுருவி இருத்தல்,அடிச்சரடாகக் காணப்படுதல் 2.(மூச்சு)மிகச் சன்னமாக வெளிப்படுதல் |
இழை விளக்கு | கண்ணாடிக் குமிழுக்குள் இருக்கும் டங்ஸ்டன் உலோக இழைகள் மின்சக்தியினால் வெப்பம் அடைவதால் ஒளிர்ந்து வெளிச்சம் தரும் விளக்கு |
இளக்கம் | (உடல் மற்றும் மண் போன்றவற்றின் விறைப்பற்ற) நெகிழ்வுத்தன்மை |
இளக்கம் | தரத்தில் குறைந்த |
இளக்காரம் | ஒருவர் மேல் தனக்குள்ள இகழ்ச்சியையும் கேலியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அல்லது ஒருவரைச் சற்றும் மதிக்காத விதத்தில் நடந்து கொள்ளும் போக்கு |
இளக்காரம் | இயல்பு நிலையில் நின்றும் குறைவாக மதித்தல் |
இளக்கு | 1.(கெட்டித்தன்மையிலிருந்து)நெகிழச் செய்தல்,இளகச் செய்தல் 2.தளர்த்துதல் |
இளகு | (தார்,மெழுகு,வெல்லம் போன்றவை வெப்பத்தால்)கெட்டித் தன்மை இழத்தல் |
இளங்கலை | பல்கலைக்கழகப் படிப்பில் முதல்நிலைப் பட்டப்படிப்பு |
இளசு | (காய்கறி ,தேங்காய் முதலியவற்றைக் குறிக்கும்போது) முற்றாதது |