இ - வரிசை 24 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இழப்பு

நட்டம்

இழவு

(குடும்பத்தில் ) சாவு நேர்தல்

இழவு கேள்

துக்கம் விசாரித்தல்,துக்கம் கேட்டல்

இழவுச்சொல்

தன் வீட்டில் நடந்த இழவைப் பற்றிய தகவலை உறவினர்களுக்குத் தெரிவித்தல்

இழவு விழுதல்

மரணம் நிகழ்தல்

இழி

(தொடர்ந்து பாம்படத்தை அணிவதால் காது மடலின் கீழ்ப்பகுதியில் உள்ள துவாரம் பெரிதாகி)தொய்வடைதல்

இழித்து

தரைகுறைவாக, இழிவாக

இழிந்த

தாழ்ந்த
கேவலமான
இழிவான

இழிநிலை

கீழ் நிலை,இழிந்த நிலை

இழிவு

கீழ்த்தரம்
தரக்குறைவு
அவமானம்

இழிவுபடுத்து

(ஒன்றை அல்லது ஒருவரை)கேவலப்படுத்தும் அல்லது புண்படுத்தும் நோக்கத்தில் ஒரு செயலைச் செய்தல்

இழு

(கையால் அல்லது ஏதேனும் இணைப்பின் மூலம் ) தனக்குப் பின்னால் அல்லது தன்னை நோக்கி அல்லது மேல் நோக்கி வரச் செய்தல்

இழுக்கு

களங்கம்

இழுத்த இழுப்புக்கு

(ஒருவருடைய) விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்து

இழுத்தடி

அலைய வைத்தல்,அலைக்கழித்தல்,காலம் தாழ்த்துதல்

இழுத்து

(மூடு ,சாத்து போன்ற வினைகளோடு)வேறு வழியில்லாமல் வலுகட்டாயமாக

இழுத்துப் பறி

1.முடிவுக்கு வராமல் தொடர்தல் 2.தாமதப்படுத்துதல்

இழுத்துப்பிடி

1.(ஒருவரை ) கட்டுப்படுத்தி வைத்தல் 2.(செலவு செய்வதில் கட்டுப்பாட்டுடன் இருத்தல்

இழுத்துப்போட்டுக்கொள்

(வேலைகளை அல்லது பொறுப்புகளை) வலிய ஏற்றுக்கொள்ளுதல்

இழுத்துவிடு

(ஒருவரைச் சிக்கலில்) மாட்டவைத்தல்