இ - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இலைப்புள்ளி நோய் | இலைகளில் பழுப்பு அல்லது சாம்பல் நிறப் புள்ளிகளைப் பெருமளவில் ஏற்படுத்தித் தாவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் |
இலைப்பேன் | இலைகளில் இருந்து சாற்றை உறிஞ்சிப் பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பழுப்பு மஞ்சள் நிறமும் கருப்பு நிறக் கோடுகளும் கொண்ட மிகச் சிறிய பூச்சி |
இலைபோடு | (இலையைப் போட்டு)உணவு பரிமாறுவதற்கு ஆயத்தம் செய்தல் |
இலையான் | ஈ |
இலையுதிர் காடு | இலையுதிர் காலத்தில் எல்லா இலைகளையும் உதிர்த்துவிடும் மரவகைகள் நிறைந்த காடு |
இலையுதிர் காலம் | (குளிர் காலத்துக்கும் கோடை காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்) சில வகை மரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்கும் காலம் |
இலைவடகம் | அரிசிக் கூழை ஆல் அல்லது அரச இலையில் ஊற்றி நிழலில் காய வைத்து எடுக்கும் வடக வகை |
இலை விழு | (ஒரு விருந்தில்)சாப்பிட வரும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலைகள் போடப்படுதல் |
இவ்வளவு | இந்த அளவு,இத்தனை |
இவ்வளவுக்கும் | இத்தனைக்கும் என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்பு படுத்தும் ஒரு இடைச்சொல் |
இவ்வாறு | இப்படி,இந்த விதமாக,இந்த மாதிரி |
இவ்விடம் | இங்கு |
இவர் | உயர்திணைப் படர்க்கையில் அருகில் இருக்கும் ஆணையோ பெண்ணையோ மரியாதையுடன் சுட்டும் பிரதிப்பெயர் |
இவர் | பெண்ணொருவர் தனது கணவரை மற்றவருக்கு சுட்டும் முறை |
இவர்கள் | அருகில் இருக்கும் ஆண் ,பெண் ஆகிய இரு பாலுக்கும் உரிய படர்க்கைப் பன்மை பிரதிப்பெயர் |
இவள் | உயர்திணைப் படர்க்கையில் அருகில் இருக்கும் பெண்ணைச் சுட்டும் பிரதிப் பெயர் |
இவன் | உயர்திணைப் படர்க்கையில் அருகில் இருக்கும் ஆணைச் சுட்டும் பிரதிப் பெயர் |
இவை | அருகில் இருக்கும் அஃறிணைப் பொருள்களைச் சுட்டும் பிரதிப்பெயர் |
இழக்கு | (நிர்பந்தத்தின் பேரில் ஒன்றைத் ) தருதல் |
இழப்பீடு | நட்ட ஈடு, |