இ - வரிசை 22 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இலச்சிணை | ஒரு அரசு,அமைப்பு, நிறுவனம் போன்றவற்றின் அதிகாரம் ,குறிக்கோள் போன்றவற்றைக் குறிப்பிடும் வகையிலோ அடையாளப்படுத்தும் வகையிலோ அமைந்திருக்கும் சின்னம் |
இலட்சணம் | 1.அழகு 2.ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு உரியதாகவோ பொருத்தமானதாகவோ கருதப்படும் குணம்,தகுதியான தன்மை |
இலட்சம் | லட்சம், ஆயிரத்தின் நூறு மடங்கு |
இலட்சியம் | இலக்கு |
இலந்தை | செம்பழுப்பு நிறத் தோல் உடையதும் இனிப்பும் புளிப்பும் கனந்த சுவை உடையதுமான சிறு பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் முட்கள் நிறைந்த சிறு மரம் |
இலயம் | லயம்,சீரான தாளப் போக்கு |
இலயி | லயி,(ஒரு செயல் அல்லது சுற்றுப்புறம் போன்றவற்றில் மனம்)ஒன்றுதல், ஆழ்தல் |
இலவங்கம் | லவங்கம் |
இலவசம் | பனம் பெறாமல் தருவது/பணம் தராமல் கிடைப்பது |
இலவம் பஞ்சு | (தலையணை,மெத்தை போன்றவற்றை செய்வதற்குப் பயன்படுத்தும்)இலவமரத்தின் முற்றிய காயில் இருந்து எடுக்கப்படும் சற்று பள பளப்பாக இருக்கும் பஞ்சு |
இலவமரம் | பஞ்சு இழைகளைக் கொண்ட நீண்ட காய்களைத் தரும் உயரமான மரம் |
இலாடம் | லாடம்,குதிரை அல்லது வண்டி மாட்டின் குளம்பு தேயாமல் இருக்க அதன் அடியில் ஆணி வைத்து அடித்துப் பொருத்தப்படும் வளைந்த இரும்புத் தகடு |
இலாபம் | லாபம்,(வியாபாரம் ,தொழில் ஆகியவற்றில்)செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாக கிடைக்கும் வருமானம்,ஆதாயம் |
இலிங்கம் | லிங்கம்,உயர்ந்த வட்ட வடிவப் பகுதியின் நடுவில் மேல் நோகிய நீள் உருண்டையாக(கல் ஸ்படிகம் முதலியவற்றில்)செய்த (சிவனைக் குறிக்கும் ) வடிவம் |
இலிபி | லிபி,எழுத்து, |
இலுப்பை | எண்ணெய் வித்துக்களாகப் பயன்படும் விதைகளைத் தரும் இனிப்புச் சுவையுடைய பூக்களைக் கொண்ட உறுதியான பெரிய மரம் |
இலேகியம் | லேகியம், மூலிகைகள்,சுக்கு,மிளகு, போன்ற பொருள்களுடன் நெய் சேர்த்து பாகுபோல காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்து |
இலை | தாவரத்தின் தண்டிலிருந்து அல்லது கிளையிலிருந்து தோன்றுவதும்(பெரும்பாலும்)மெல்லியதாகவும்,தட்டையாகவும் இருப்பதுமான பாகம் |
இலைச் சுருட்டுப் புழு | நெற்பயிரின் சுருண்ட தாள்களுக்குள் காணப்படுவதும் பச்சயத்தை உறிஞ்சிப் பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுமான பச்சை நிறப் புழு |
இலைத் துளை | தாவரங்கள் சுவாசிக்க உதவும் விதத்தில் இலையின் கீழ்ப் பகுதியில் இருக்கும் நுண்ணிய துளை |