இ - வரிசை 21 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இல்லத்தரசி | மனைவி,குடும்பத்தலைவி |
இல்லம் | வீடு |
இல்லற இன்பம் | இல்லற சுகம் (தம்பதியர் பெறும் உடலுறவு இன்பம்) |
இல்லறம் | கணவன் மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கை,குடும்ப வாழ்க்கை |
இல்லா | 1.இல்லாத,2.'உள்ள'.'உடைய','இருக்கிற' ஆகிய பெயரடைகளின் எதிர்மறை |
இல்லாததும் பொல்லாததும் | (ஒருவரைப் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த) உண்மையைத் திரித்தும்,இட்டுக் கட்டியும் சொல்வது |
இல்லாமல் | (ஓர் இடத்தில் ஒன்று அல்லது ஒருவர்)காணப்படாமல் அல்லது இருக்காமல்,(குணம்,தன்மை முதலியவை)இருக்காமல் |
இல்லாமை | (குறிப்பிடப்படுவது) இல்லாத நிலை அல்லது தன்மை |
இல்லாவிட்டால் | (ஒன்று அல்லது ஒருவர்) இல்லையென்றால் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல் |
இல்லாவிடில் | இல்லாவிட்டால் |
இல்லாள் | மனைவி |
இல்லை | ஒன்றை அல்லது ஒரு செயலை மறுப்பதற்கு உபயோகப்படுத்தும் சொல் |
இலக்கணம் | மொழியின் ஒலி எழுத்து,சொல் வாக்கியம் முதலியவற்றின் அமைப்பை வழக்குகளின் அடிப்படையில் விவரிக்கும் விதிகள் |
இலக்கணம் | எழுத்து |
இலக்கம் | எண் |
இலக்கியம் | கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு |
இலக்கு | குறி |
இலகு | எளிது |
இலகுரக வாகனம் | இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர சிறிய வாகனம் |
இலங்கு | அனைவருன் அறியும்படியாக அமைந்திருத்தல்,திகழ்தல் |