இ - வரிசை 20 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இருமல் | (சளி,காய்ச்சல் காரணமாக சில சமயம்)தொண்டையில் இருந்து சத்தத்துடன் வெளிப்படும் காற்று |
இருமுடி | (சில புண்ணியத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் வழிபாட்டுக்கும் பயணத்திற்கும் வேண்டிய பொருள்களை வைத்திருக்கும்)இரு பை கொண்ட துணி |
இருமுனை வரி | ஒரு பொருள்(உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து)முதலில் விற்கப்படும்போதும்(கடையிலிருந்து வாங்குபவர்களுக்கு)கடைசியாக விற்கப்படும்போதும் விதிக்கப்படும் விற்பனை வரி |
இருமை | நன்மை, தீமை ஆகிய இரண்டும் |
இருவழி | ஒன்றைக் கொடுப்பதும் கொடுத்த இடத்திலிருந்து மற்றொன்றைப் பெறுவதுமான Mஉறை,பரஸ்பரம் |
இருவழிப்பாதை | போவதற்கும் வருவதற்கும் தனித்தனியாகப் போடப்பட்டிருக்கும் ரயில் பாதை |
இருவாட்சி | இரவில் மலரும் மணம் மிக்க (மல்லிகை இனத்தைச் சேர்ந்த )சிறு வெண்ணிறப் பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் சிறு மரம் |
இருவாட்டித் தரை | மணலும் களிமண்ணும் கலந்திருக்கும் (பயிரிட முடியாத நிலம்) |
இருவித்திலைத் தாவரம் | ஆணிவேர் உடையதும் விதையில் இரண்டு வித்திலைகள் கொண்டதுமான தாவர இனம் |
இருள் | வெளிச்சம் இல்லாத நிலை,ஒளி இன்மை |
இரை | விலங்குகள் அல்லது பறவைகளால் கொன்று தின்னப்படும் பிற உயிரினங்கள் |
இரைகொல்லி | பிற உயிரினங்களைக் கொன்று தின்னும் விலங்கு ,பறவை முதலியன |
இரைச்சல் | (மனிதர்கள், இயந்திரங்கள்,இயற்கைச் சக்திகள் போன்றவை எழுப்பும் )கலவையான,தெளிவற்ற பெருஞ்சத்தம் |
இரைப்பு | இயல்பை விட அதி வேகத்தோடு வெளிப்படும் சுவாசம் |
இரைப்பை | உணவைக் கூழாக்குவதற்குத் தேவையான அமிலங்களைக் கொண்டதும் சுருங்கி விரியக் கூடியதுமான பை போன்ற உள்ளுறுப்பு |
இரை மீட்டு | அசை போடுதல் |
இரையாக்கு | (ஒன்றை அல்லது ஒருவரை குறிப்பிட்ட ஒன்றுக்கு)பலியாகுமாறு செய்தல் |
இரையாகு | (குறிப்பிட்ட ஒன்றுக்கு)பலியாதல் |
இரையெடு | (விலங்கு ,பறவை போன்றவை) உணவு உண்ணுதல் |
இல் | இடப்பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபாகிய இடைச்சொல் |