இ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இசைக்கருவி | இசையை உருவாக்குவதற்கு உதவும் சாதனம் அல்லது கருவி |
இசைக்கவை | தட்டும்போது ஏற்படும் அதிர்வினால் ஒருவித ரீங்கார ஒலியை எழுப்பும் (ஒலி அலைகளை ஆய்வு செய்ய உதவும்) கவை வடிவில் அமைக்கப்பட்ட எஃகு சாதனம் |
இசைக் குழு | இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர் குழு |
இசைகேடாக | உரிய முறையில் இல்லாமல் |
இசைத்தட்டு | இசை ,பேச்சு முதலியவை கோடுகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் வட்ட வடிவத் தகடு |
இசைத்தூண் | தட்டினால் வெவ்வேறு ஸ்வரங்களாக ஒலிக்கும் கல் தூண்களில் ஒன்று |
இசை நடனம் | ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்த அல்லது கதையை விளக்கும் விதத்தில் அமைந்திருக்கும் இசையுடன் கூடிய நடன வகை |
இசை நாடகம் | கதாப்பாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பாத்திரத்தைப் பாடல்கள் மூலமே நடித்துக் காட்டும்(இசையை பிரதானமாகக் கொண்ட ) நாடக வகை |
இசை நாற்காலி | இசை ஒலிக்கும்போது தங்கள் எண்ணிக்கையைவிட குறைவாகவும் வட்டமாகவும் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளைச் சுற்றி ஓடிக்கொண்டும், இசை நின்றதும் நாற்காலிகளில் இடம் பிடித்து உட்கார்ந்தும் விளையாடும் விளையாட்டு |
இசையமை | (திரைப்படம் ,நாடகம் முதலியவற்றுக்கு) பின்னணி இசையையோ பாடுவதற்கான இசையையோ உருவாக்குதல் |
இசையமைப்பாளர் | (திரைப்படம், நாடகம் முதலியவற்றுக்கு)இசையமைப்பவர் |
இசைவாணர் | இசைக் கலைஞர் |
இசைவு | ஒப்புதல் |
இஞ்சி | (உணவிலும் நாட்டு மருந்திலும் சேர்க்கும்) உறைப்புச் சுவையும் நார்த் தன்மையும் கொண்ட (தரைக்குக் கீழ் வளரக் கூடிய)சதைப்பற்றுள்ள தண்டு/அந்த தண்டைக் கொண்ட செடி |
இஞ்சி | அங்குலம் |
இஞ்சித்தேறு | இஞ்சித்துண்டு |
இஞ்சிமுரப்பா | (அசீரணம் வாயுக்கோளாறு போன்றவற்றை நீக்கும்) வெல்லப்பாகில் இஞ்சித்தூளைப் போட்டுக் கிளறித் தயாரிக்கப்படும் கைமருந்து |
இட்டுக்கட்டு | (இல்லாததை இருப்பதாக அல்லது நிகழாததை நிகழ்ந்ததாக) கற்பித்துக் கூறுதல்,கதை கட்டுதல் |
இட்டுச்செல் | (ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அல்லது மற்றொரு நிலைக்கு) கொண்டு போதல் |
இட்டு நிரப்பு | (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்)ஈடு செய்தல் |