இ - வரிசை 19 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இருந்திருந்து | 1.நீண்ட நாட்கள் காத்திருந்து(ஆனால் அதற்குத் தகுந்த பலன் இல்லாமல்) 2.இட வேற்றும உருபோடு இணைந்து நீக்கம்,தொடக்கம் முதலிய தொடர்பை உணர்த்தும் வேற்றுமை உருபாக பயன்படும் இடைச்சொல் |
இருந்தும் | 'இருந்தபோதிலும்' என்னும் பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல் |
இருப்பிடச் சான்றிதழ் | (ஒரு நாட்டில்)குறிப்பிட்ட பகுதியில் நிரந்தரமாக வசிப்பவர் என்பதற்குச் சான்றாக ஒருவருக்கு அரசு வழங்கும் சான்றிதழ் |
இருப்பிடம் | (ஒன்று அல்லது ஒருவர்) இருக்கும் அல்லது வசிக்கும் இடம்,உறைவிடம் |
இருப்பினும் | இருந்தபோதிலும் என்ற சொல்லில் பயன்படுத்தப்படும் இடைச்சொல் |
இருப்பு | (ஒரு நோக்கத்தோடு )சேமித்து வைத்திருக்கும் பொருள் |
இருப்புக்கு வருதல் | (வீதிவலம் வரும்)உற்சவமூர்த்தி கோயிலுக்கு வந்து சேர்தல் |
இருப்புக்கொள் | (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லதுஎதிர்மறைத் தொனியில்) நிதானத்துடனும் படபடப்பின்றியும் இருத்தல் |
இருப்புச் சட்டி | (தாளித்தல் போன்ற சமையல் வேலைகளுக்குப் பயன்படும்)குழிந்த உட்பகுதியை உடைய இரும்புத் தகட்டால் ஆன பெரிய பாத்திரம் |
இருப்புப்பாதை | (ரயில் போவதற்காக)தண்டவாளம் போட்டு அமைக்கப்படும் பாதை |
இருபது | பத்தின் இரண்டு மடங்கைக் குறிக்கும் எண் |
இருபால் | ஆண் பெண் இனப்பெருக்கப் பாகங்களை அல்லது உறுப்புகளை ஒன்றாகப் பெற்றிருக்கும் |
இருபாலர் | ஆண் மற்றும் பெண் |
இருபாலினம் | ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளை அல்லது இருபாலின் இயல்புகளைத் தன்னுள் கொண்டுள்ள உயிரினம் |
இரும்பு | (இயந்திரம் ,கருவி முதலியன செய்யப் பயன்படும்) நிலத்திலிருந்து தோண்டி எடுக்கப்படும் தாதுப் பொருளில் இருந்து பெறப்படும் கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம் |
இரும்புக்கடை | (பெரும்பாலும் இரும்பால் செய்யப்பட)வீட்டு உபயோகப் பொருட்கள்,கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை விற்கும் கடை |
இரும்புக்கரம் கொண்டு | மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு |
இரும்புச்சத்து | (உடலின் வளர்ச்சிக்குத் தேவையான) இரும்புத் தாதுவை உள்ளடக்கிய சத்துப்பொருள் |
இரும்புத்திரை | மேலைநாடுகள் தமக்கும் ஐரோப்பிய கம்யூனிச நாடுகளுக்கும் இடையே இருந்ததாகக் கருதிய நேரடி வாணிபத் தொடர்பும் செய்திப் பரிமாற்றமும் செய்து கொள்ள முடியாத கட்டுப்பாடு |
இரும்பு யுகம் | (சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால்)மனிதன் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் |