இ - வரிசை 18 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இரு

உட்கார்தல்
பெரிய. மாயிரு ஞாலம் (குறள், 999).
கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக. 1171).

இருக்கட்டும்

பேசிக்கொண்டிருகும் ஒரு விசயத்தை விட்டுவிட்டு வேறொரு விசயத்தைக் குறித்துப் பேசப்போகும்போது பயன்படுத்தும் சொல்

இருக்கை

உட்காருவதற்கு என்று செய்யப்பட்ட அமைப்பு(நாற்காலி,வாங்கு,கதிரை முதலியன)
நான்கு கால்களை உடைய நாற்காலி

இருக்கைப் பேராசிரியர்

பல்கலைக் கழகத்தில் ஒரு இருக்கைக்கும் நியமிக்கப்பட்ட பேராசிரியர்

இரு கரம் நீட்டி

(வரவேற்கும் விதமாக) மிகுந்த விருப்பத்தோடு

இருகாலி

இரண்டு பனங்கொட்டைகள் மட்டுமே உள்ள பனங்காய்

இருசு கட்டை

(பெரும்பாலும் பார வண்டிகளில்) அச்சுக்கு மேல் பாரைத் தாங்கி நிற்கும் மரம்

இருட்டடி

அடிப்பது யார் என்று தெரியாத வகையில் நடத்தப்படும் தாக்குதல்

இருட்டடி

அடித்தவர்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் பொதுவாக இரவு நேரத்தில் அடித்தல்

இருட்டடிப்பு

1.ஒரு செய்தி,நிகழ்ச்சி அல்லது ஒருவருடைய சாதனை போன்றவற்றைப் பிறர் அறியாதபடி வேண்டுமென்றே மறைக்கும் செயல் . 2.(போர்க் காலத்தில்) இரவில் கட்டடங்களிலிருந்து வரும் வெளிச்சத்தை (கறுப்புக் காகிதம் போன்றவற்றைக் கொண்டு)அடைக்கும் செயல்

இருட்டு

இருள் சூழ்தல்,வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும் நிலை
ஒளியற்ற தன்மை
அறியாமை

இருண்ட

இருள் நிறைந்த

இருண்ட காலம்

(வரலாற்று நோக்கில் சீரற்ற நிர்வாகத்தின் காரணமாக ஒரு நாட்டில் நிலவும் மோசமான நிலை

இருண்மை

புரிபடாமல் இருப்பது,எளிதில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பது

இருத்தலியல்

அறம் என்றோ கடவுள் என்றோ ஒன்று இல்லாத உலகில் தனிமனிதன் சுதந்திரமும் பொறுப்பும் உடையவன் என்றும் அவற்றைப் பயன்படுத்தி அவன் எடுக்கும் முடிவுகள் அவன் வாழ்க்கை நிலையை நிர்ணயிக்கின்றன என்றும் கூறும்,ஐரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தத்துவம்

இருத்து

உட்காரச்செய்தல்

இருதயத் துடிப்பு

இருதயத்தின் சுருங்கி விரியும் இயக்கமும் அதனால் ஏற்படும் ஒலியும்

இருதயம்

சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்துள்ளதுமான தசையால் ஆன உள் உறுப்பு

இருந்தபோதிலும்

முதல் வாக்கியம் ஒரு நிலையை விவரிக்க அதற்கு மாறான விளைவை இரண்டாவது வாக்கியம் தெரிவிக்கும்போது இரண்டு வாக்கியங்களையும் தொடர்புபடுத்து இடைச்சொல், எனினும்,இருந்தாலும்

இருந்தாற்போல்

(கொஞ்சமும் எதிர்பாக்காதபோது,திடீரென்று