இ - வரிசை 17 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரத்த வெறி | பிறரைத் தாக்குதல்,கொல்லுதல் போன்ற செயல்களின் மீது ஒருவருக்கு இருக்கும் தீவிர வெறி |
இரத்தினம் | ரத்தினம்,மரகதம்,பவளம் போன்ற விலையுயர்ந்த கல் |
இரப்பை | இமை |
இரவல் | தன் உபயோகத்திற்காகப் பிறர் பொருளைத் தற்காலிகமாகப் பெற்றுத் திரும்பித் தருவது |
இரவல் குரல் | ((திரைப்படம் முதலியவற்றில் ஒருவருக்குப் பதிலாக) மற்றொருவர் பேசிப் பதிவுசெய்யப்படும் குரல் |
இரவல் சோறு | (சொந்தமாக உழைத்துச் சாப்பிடாமல்) மற்றவரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு |
இரவிரவாக | இரவு முழுவதும் |
இரவிரவாக | இரவு முழுவதும் விடிவதற்கு முன்பாக |
இரவு | சூரியன் உதிக்கும் வரை உள்ள இருண்ட நேரம் |
இரவுப்படி | (ஒரு நிறுவனம் தொழிற்சாலை முதலியவற்றில்)இரவு நேரத்தில் செய்யும் பணிக்காகத் தரப்படும் (சம்பளம் தவிர்த்த)தொகை |
இரவுப் பாடசாலை | (பகல் நேரத்தில் பள்ளி செல்ல முடியாதவர்களுக்கு)அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் தர இரவு நேரத்தில் நடத்தப்படும் பள்ளி |
இரவுபகலாக | ஓய்வில்லாமல் தொடர்ந்து |
இரவு வாழ்வி | இரவில் மட்டுமே வெளியே வந்து இரை தேடும் உயிரினம் |
இரவு விடுதி | (இரவில் பொழுதுபோக்காக)நடனமாடுதல் போன்ற கேளிக்கைகள் நிறைந்த விடுதி |
இரவு விளக்கு | (இரவில் பெரும்பாலும் படுக்கையறையில் பயன்படுத்தப்படும்)குறைந்த அளவு வெளிச்சத்தைத் தரும் மின்விளக்கு,விடிவிளக்கு |
இரவோடுஇரவாக | (ஒரு செயலை பிறர் அறியாத வண்ணம்) இரவில் ஆரம்பித்து அதே இரவுக்குள் |
இராகம் | பண் |
இராசவள்ளிக் கிழங்கு | பெருவள்ளிக் கிழங்கு |
இராசி | ராசி,ஒருவர் பிறக்கும் நேரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம் |
இராசி | மேஷம் |