இ - வரிசை 16 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இரணைக் குழந்தை

இரட்டைப் பிள்ளை,இரட்டையர்

இரத்த அழுத்தம்

இரத்த ஓட்டத்தின் காரணமாக இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தம்

இரத்த அழுத்தமானி

(ஒருவரின்)இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி

இரத்த ஓட்டம்

உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று மீண்டும் இருதயத்திற்கே திரும்பும் தொடர்ச்சியான இரத்தச் சுழற்சி

இரத்தக் கண்ணீர் வடி

(ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு ஏற்பட்ட மோசமான நிலையைக் கண்டு) மிகுந்த மன வேதனை அடைதல்

இரத்தக்களரி

இரத்தம் சிந்திக் காணப்படும் கோர நிலை

இரத்தக் குழாய்

இருதயத்திலிருந்து அல்லது இருதயத்திற்கு இரத்தம் செல்லும் தசையால் ஆன குழாய்

இரத்தக்கொதி

1.இளமையின் காரணமாக ஏற்படும் காம உணர்வு 2.(இளம் பருவத்தில் காணப்படும்)திமிர்

இரத்தக் கொதிப்பு

(ஒருவருடைய)இரத்த அழுத்தம் சராசரியான அளவைவிட அதிகமாக இருக்கும் நிலை

இரத்த சம்பந்தம்

ஒரே வம்சத்தில் பிறந்ததால் ஏற்படும் நெருங்கிய உறவு

இரத்தசோகை

இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதால் ஒருவர் பலவீனமாகவும் சோர்வாகவும் முகம் வெளிறிக் காணப்படும் நிலை

இரத்தத் தட்டு

இரத்தம் உறைவதற்குக் காறணமாக இருக்கும் ,இரத்தத்தில் தட்டு வடிவில் அமைந்திருக்கும் ஒரு வகை செல்

இரத்தப்போக்கு

1.(காயம் போன்றவற்றால் ஏற்படும்) அதிக அளவிலான இரத்த வெளியேற்றம் 2.(மாதவிடாயின்போது ஏற்படும்)அதிக அளவிலான இரத்த வெளியேற்றம்

இரத்தம்

குருதி

இரத்த மூலம்

ஆசனத் துவாரத்திலிருந்து இரத்தம் வடியும் நோய்

இரத்தம் உறை

(உடல் சில்லிடும் அளவுக்கு) மிகுந்த பயம் ஏற்படுதல்

இரத்தம் கொதி

(ஒன்று நியாயமற்றது என்பதால்) மிகுந்த கோபம் ஏற்படுதல்

இரத்தம் சுண்டு

(இரத்த ஓட்டம் குறைவதால்) சருமம் வெளிறிப்போதல்

இரத்தமானி

இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் மருத்துவச் சாதனம்

இரத்த விளாறு

(அடி,காயம் முதலியவற்றால் உடல் பாகங்களில்)இரத்தம் பெருக்கெடுக்கும் நிலை