இ - வரிசை 15 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரட்டைமண்டை | பிறந்த குழந்தையின் கபால எலும்புகள் உரிய காலத்துக்கு முன்பே ஒன்று சேர்ந்து விடுவதால் சராசரி அளவை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும் தலை |
இரட்டையர் | 1.இரட்டைக் குழந்தைகள் 2.இணைந்தே செயல்படும் அல்லது காணப்படும் இருவர் |
இரட்டை வரி விதிப்பு | (ஒருவர் அந்நிய நாட்டில் ஈட்டும் வருமானத்திற்கு இரண்டு நாடுகளிலும் விதிக்கப்படும் வரி |
இரட்டைவால் | (கழுத்தைச் சுற்றி வந்து) முன்பக்கத்தில் சிறிதாகத் தெரியும் வகையில் அணியும் துணிப்பட்டை |
இரட்டைவால் குருவி | கரிச்சான் |
இரட்டை வேடம் | 1.திரைப்படத்தில் ஒரே நடிகர் இரண்டு விதமான வேடங்கலை ஏற்று நடித்தல் 2.எதிரெதிரான இரண்டு தரப்புகளுக்கும் அல்லது நிலைகலுக்கும் சார்பாக நடந்துகொள்வதுபோலக் காட்டிக்கொள்ளும் தன்மை |
இரண்டக நிலை | இரட்டை நிலை |
இரண்டகம் | நம்பிக்கைத் துரோகம் |
இரண்டறக் கல | (தனித் தனியானவை வேற்றுமை தெரியாதபடி ) ஒன்றாதல் |
இரண்டாக்கு | இரண்டாகப் பிரித்தல் |
இரண்டாகு | இரண்டுபடுதல் |
இரண்டாம்பட்சம் | (குறிப்பிடப்படும் இரண்டில்) ஒன்று மற்றொன்றைவிட மதிப்பு முக்கியத்துவம் ஆகியவற்றில் குறைந்தது, உடனடிக் கவனத்துக்கு உரியதாக அமையாதது |
இரண்டிலொன்று | தீர்மானமாக |
இரண்டு | ஒன்று என்ற எண்ணுக்கு அடுத்து வருவது |
இரண்டுபடு | 1.இரு பிரிவுகளாகப் பிரிதல் 2.ஆரவாரத்தோடு காணப்படுதல்,அமர்க்களப்படுதல் |
இரண்டு பண்ணு | (ஓர் இடத்தின் இயல்பு நிலை பாதிப்படையும் அளவுக்கு) களேபரமும் ஆர்ப்பாட்டமும் செய்தல் |
இரண்டொரு | ஓரிரு,ஒருசில |
இரணம் | ரணம் |
இரணை | தனிதனியாக இருக்க வேண்டிய இரண்டு ஒன்றாகப் பொருந்தியிருப்பது,இரட்டை |
இரணை | வாழைப் பழம் முதலியன ஒன்றில் ஒன்று ஒட்டி இணைந்திருத்தல் |