இ - வரிசை 14 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இரட்சி

(துன்பத்தில் இருந்து)மீட்டல்,காத்தல்

இரட்சிப்பு

மீட்பு

இரட்டி

இரண்டு மடங்காக்குதல்
இருமடங்காகு
திரும்பச் செய்
மாறுபட்டிரு
[இரட்டித்தல், இரட்டிப்பு]

இரட்டிப்பு

ஒன்றின் இரு மடங்கு

இரட்டை

ஒரே மாதிரியான அல்லது ஒரே வகையான பொருள்களில் இரண்டு ஒன்றாகப் பொருந்தியிருப்பது
இரட்டையாயுள்ள பொருள்கள்
இரட்டைப் பிள்ளைகள்
தம்பதிகள்
இரட்டை எண்
மிதுனராசி

இரட்டை அர்த்தம்

(மேலோட்டமாக ஒரு பொருளும் உள்ளடக்கமாக நாகரிகமற்ற பொருளும் என )இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளக்கூடிய பொருள்

இரட்டை எண்

இரட்டைப்படை எண், (2,4,6,8,..போன்று)இரண்டால் மிகுதியின்றி வகுக்கப்படும் எண்

இரட்டைக்கிளவி

ஓர் இணையாக வழங்கிவருவதும் பிரித்தால் பொருள் தராததுமான(ஒலிக்குறிப்பு போன்ற) சொல் (சலசல,கலகல)

இரட்டைக் குடியுரிமை

பிறந்த நாட்டிலும் ,குடியேறியுள்ள நாட்டிலும் ஒருவருக்கு உள்ள குடியுரிமை

இரட்டைக்குவளை

(சில கிராமப்புறத் தேநீர்க் கடைகளில்)சில சாதியினருக்குத் தனிக் குவளைகளைப் பயன்படுத்தும் குற்றம்

இரட்டைக் குழந்தைகள்

இரட்டைப் பிள்ளைகள்,இரட்டைப் பிறவி,ஒரே பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகள்

இரட்டைக் குழல் துப்பாக்கி

முன்பகுதி இரண்டு குழல்கலாக அமைந்து சுடும்போது இரண்டு குண்டுகள் ஒரே சமயத்தில் வெளியேறுமாறு அமைக்கப்பட்ட ஒரு வகைத் துப்பாக்கி

இரட்டைத் தலைவலி

ஒரே நேரத்தில் தோன்றும் இரண்டு விதமான தொந்தரவுகல்

இரட்டைத் தவறு

(டென்னிஸ் விளையாட்டில்)தரப்பட்ட இரண்டு வாய்ப்புகளிலும் பந்தை சரியாக அடித்துப் புள்ளியை எடுக்காமல் விடுதல்

இரட்டை நாக்கு

(மனசாட்சிக்குச் சிறிதும் பயப்படாமல்)எளிதாக பேச்சை மாற்றிப் பேசும் தன்மை

இரட்டை நாடி

இருபிரிவாக இருப்பதுபோல் தோற்றம் தரும் அகன்ற முகவாய்
பருத்த உடம்பு

இரட்டை நிலை

ஒரே பிரச்சினைக்கு முரண்பட்ட இரு நிலைகளை ஒருவர் மேற்கொள்ளும் அணுகுமுறை

இரட்டைப் பட்டம்

ஒரே கால எல்லைக்குள் இரண்டு பட்டங்களைப் பெறும் வகையிலான படிப்பு முறை

இரட்டைப்பட்டு

(சங்கிலி,வேட்டி முதலியவற்றைக் குறிக்கும்போது) இரட்டையாக அமைந்திருப்பது

இரட்டைப்பட்டு

கயிறு சங்கிலி முதலியவை இரு அடுக்குகளில் அமைந்திருத்தல்