இ - வரிசை 13 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இயற்கை எய்தல்

(மங்கல வழக்காகக் குறிப்பிடப்படும் போது)இறத்தல்

இயற்கை வழி

வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உரம்,பூச்சிக்கொல்லி போன்றவற்றைத் தவிர்த்து தாவரங்கள்(சிலந்தி,பொறிவண்டு போன்ற )பூச்சிகள் ,நுண்ணுயிரிகள் ஆகியவற்றை உரமாகவோ பூச்சிக்கொல்லியாகவோ பயன்படுத்தும் வேளாண்மை முறை

இயற்பியல்

பொருள்களின் தன்மை இயற்கைச் சக்திகளின் இயக்கம் ,மாற்றம் முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் துறை,பௌதிகம்

இயற்பியல் தராசு

தங்கம், வெள்ளி போன்ற தனிமங்களின் எடையை துல்லியமாக அளவிடப் பயன்படும் சாதனம்

இயற்பெயர்

பெற்றோர் இட்ட பெயர்
ஒரு பொருளுக்கு இயல்பாக இடப்பட்டு வழங்கும் பெயர்

இயற்று

படைத்தல்
எழுதுதல்
உருவாக்குதல்
ஏற்படுத்துதல்
நிறைவேற்றுட்

இயனக்கூடு

கள் இறக்குவதற்கு தேவையான கத்தி,போன்ற சாதனங்களை வைத்துக்கொள்ள பயன்படும், பனை நாரால் செய்யப்பட்ட பெட்டி போன்ற சாதனம்

இயை

(முரண்பாடு இல்லாமல்) பொருந்துதல்
இணைதல்

இயைபு

பொருத்தம்
தொடர்பு
செய்யுளடிகளில் ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது

இரந்து

கெஞ்சிப் பெறுதல்,தயவுடன் வேண்டுதல்

இரக்கப்படு

மனம் இளகுதல்,இரங்குதல்

இரக்கம்

(பிற உயிர்களின் துன்பம் கண்டு)வருந்தும் உணர்வு
பரிவு

இரகசியம்

ரகசியம்,தனக்கு மட்டுமே தெரிந்த பிறர் அறியாதவாறு காத்துக் கொள்கிற செய்தி
மறைபொருள்
அந்தரங்கம்

இரங்கல்

ஒருவர் மரணம் அடிந்ததற்குத் தெரிவிக்கும் வருத்தம்,அனுதாபம்

இரங்கற்பா

இரங்கல் தெரிவித்துப் பாடும் பாடல்

இரங்கு

பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்துதல்
தயை செய்
இரக்கம் கொள்
அழு
வருந்து
செய்தற்கு வருந்து
பேரொலி செய்
யாழ் போல் ஒலி செய்
[இரங்குதல், இரங்கல்]

இரசவாதம்

உலோகங்களை பொன்னாக மாற்றும் என்று நம்பப்படும் வித்தை - இரசவாதி

இரசவாதி

இரசவாதம் செய்பவர்

இரசாயனம்

ரசாயனம்,வேதியியல்
வேதியியல் முறையில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பொருள்
பொருள்களின் இயல்பு அமைப்புகளை ஆராயும் நூல்
காயசித்தி மருந்து
பிணி மூப்பு முதலியன போக்கும் மருந்து

இரட்சகன்

(துன்பம் நேராமல் )காப்பவன்