இ - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இயங்கியல் | இயற்கையிலும் சமூகத்திலும் சிந்தனையிலும் காணப்படும் முரண்பட்ட அம்சங்களையும் அவற்றின் செயல்பாட்டையும் பற்றிய கோட்பாடு |
இயங்கு | (இயற்கையில் அமைந்த அல்லது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முறைகள்) செயல்படுதல் |
இயந்திரகதி | இயந்திரத்தனம், உணர்வுபூர்வமான ஈடுபாடு,மாறுதல் இல்லாமல் ஒரு செயலைச் செய்யும் தன்மை |
இயந்திரத் துப்பாக்கி | விசையை அழுத்தினால் வேகமாகவும் தொடர்ச்சியாகவும் குண்டுகளை வெளியேற்றும் துப்பாக்கி |
இயந்திரம் | ஒரு வேலையைச் செய்வதற்கு உருவாக்கப்பட்டதும் நீராவி,மின்சாரம் முதலிய சக்தியாலோ இயக்கப்படுவதுமான சாதனம் அல்லது கருவி |
இயந்திர மனிதன் | மனிதன் செய்யும் சில செயல்களைச் செய்வதற்கு உருவாக்கப்படும் இயந்திரம் |
இயல் | (ஒருவரால் ஒன்றைச் செய்ய)முடிதல் |
இயல்பு | பண்பு |
இயல்பூக்கம் | இயற்கையாக அமைந்திருக்கும் தூண்டுதல் |
இயலாமை | ஒருவர் ஒன்றைச் செய்ய முடியாத நிலை,ஆற்றல் இன்மை |
இயற்கணிதம் | எண்களுக்குப் பதிலாக குறியீடுகளையும் எழுத்துகளையும்பயன்படுத்தும் ஒரு கணிதப்பிரிவு |
இயற்கை | தானாகவே காணப்படும் மலை நீர் போன்றவற்றை அல்லது தனகவே உண்டாகும் மழை,காற்று,இடி போன்றவற்றைப் பொதுவாகக் குறிக்கும் சொல் |
இயற்கை உணவு | காய்கறி,கீரை பழம் ,பால் போன்று இயற்கையில் கிடைப்பதும் ,சமைக்கப்படாமல் உட்கொள்ளப்படுவதுமான உணவுப்பொருள் |
இயற்கை உபாதை | இயற்கை கடன், சிறுநீர் அல்லது மலம் கழிப்பதைக் குறிப்பதற்கு இடக்கரடக்கலாகப் பயன்படுத்தும் சொல் |
இயற்கை உரம் | செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட வேதிப்பொருள்களைக் கொண்டிருக்காத எரு,தழையுரம் போன்ற உரம் |
இயற்கை எரிவாயு | (பூமிக்கு அடியில்)வாயு நிலையில் இருக்கும் எரிபொருள் |
இயற்கை சீற்றம் | புயல்,வெள்ளம்,நில நடுக்கம் போன்ற பெரும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இயற்கை உண்டாக்கும் அழிவுகள் |
இயற்கைத் தேர்வு | (பரிணாம வளர்ச்சியில்)சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உயிர்வாழத் தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே அழிந்து போகாமல் இருக்க முடியும் என்கிற நியதி |
இயற்கை மருத்துவம் | இயற்கை உணவு உண்ணுதல்,உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை |
இயற்கையியலாளர் | விலங்குகள்,தாவரங்கள்,சுற்றுச்சூழல் போன்றவற்றுக்குத் தொடர்புடைய துறைகளில் ஈடுபடுபவர் அல்லது ஆர்வமுள்ளவர் |