இ - வரிசை 11 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இப்படிக்கு

இங்ஙனம்

இப்படிப்பட்ட

இந்த விதமான

இப்படியாக

குறிப்பிடப்படும் இந்த விதத்தில்,இப்படி

இப்படியான

இப்படிப்பட்ட,இவ்வாறான

இப்போது

இப்பொழுது
(நிகந்காலத்தின்) இந்தக் கட்டத்தில்
(ஒன்றைச் செய்கிற சொல்கிற)இந்த நேரத்தில்

இப்போதைக்கு

தற்காலிகமாக,தற்சமயத்துற்கு

இப்போதைய

தற்சமயம் நிலவும்

இம்சி

இம்சை செய்தல்,வருத்துதல்

இம்சை

(உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் )வருத்தி உண்டாக்கும் வேதனை

இம்மி

மிகச் சிறிய துகள்
மிகச் சிறிதளவு
ஒரு சிறு துணுக்கு
ஒரு சிறு எடை
ஒரு சிறு பின்னம்

இம்மை

இந்த உலக வாழ்வு
இந்தப் பிறவி
இப்பிறப்பு
இம்மை x மறுமை

இமயம்

இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள உயரமான மலைத்தொடர்

இமாலய

மிகப் பெரிய ,

இமை

(கண்ணை அனிச்சையாக மூடித் திறத்தல்
கண்களில் மேலும் கீழும் அரை வட்ட வடிவில் பாதுகாப்பிற்கு அமைந்துள்ள தோல்

இமைப்பொழுது

(கண் இமைப்பதற்கு ஆகும் நேரத்தைப் போன்ற)மிகக் குறைந்த நேரம்,ஒரு நொடி

இயக்கம்

(சீரான) அசைவு அல்லது நகர்வு,செயல்பாடு
(மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும்படியான) கூட்டுச் செயல்பாடு

இயக்கம்

ஈழ விடுதலை அமைப்பு

இயக்கவியல்

இயக்கத்தைப் பற்றியும் அதற்குக் காரணமான விசைகளைப் பற்றியும் விவரிக்கும் இயற்பியல் பிரிவு

இயக்கு

(இயந்திரம் ,சாதனம் போன்றவற்றை)இயங்கச் செய்தல், கையாளுதல்
திரைப்படம் ,நாடகம், நிகழ்ச்சி போன்றவற்ரை முழு வடிவம் பெறுவதற்கான பொறுப்பை ஒருவர் மேற்கொள்ளுதல்

இயக்குநர்

திரைப்படம்;நாடகம் தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றை இயக்குபவர்
ஒரு நிறுவனத்தின் அல்லது ஓர் அரசுத் துறையின் உயர் நிர்வாகத் தலைவர்