இ - வரிசை 104 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இளையது

தன்னிலும் மூத்த சகோதரரை கொண்டவரை குறிப்பிடும் முறை

இற்றைவரை

இந்நேரம் வரை

இறக்குதல்

செயற்பாடு ஈடுபட வைத்தல்

இறங்குதல்

முயற்சியொன்றில் ஈடுபட தொடங்குதல்

இறந்து போதல்

இலை குழை முதலியன மண்ணுக்குள் சிதைவடைந்து போதல்

இறம்ப

நிறைய, நிரம்ப

இறவல்

மிகவும் பழசாகி நைந்து போன

இறாஞ்சுதல்

கவர்தல், பிடுங்குதல், வயப்படுத்தல்

இறாட்டுப் பிறாட்டு

சச்சரவு

இறாத்தல்

453. 59 கிராம் கொண்ட நிறுத்தல் அளவு, மீனுக்குத் தீர்வை அறவிடப்படும் இடம்

இறுமகண்டன்

அஞ்சாமையும் விட்டுக்கொடுக்காத தன்மையும் கொண்ட ஆண்

இறைச்சிப்பங்கு

சிலர் சேர்ந்து ஆடும் முதலியவற்றை வெட்டி பங்குகளாக்கி பொதுவாக பனை ஓலையில் சுற்றிக் கட்டி எடுத்துச் செல்லும் இறைச்சி

இறைசுவதோர்

போர்த்துக்கேயர் ஆட்சி காலத்தில் அரச வரிகளை வசூலிக்கும் அதிகாரியின் பதவி பெயர்

இறைப்பு மழை

பயிர், கன்றுகளிற்கு நீர்ப் பாய்ச்சிய அளவிற்கு நிலம் நனையப் போதுமான அளவு மழை

இறையால்

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் இருந்ததொரு பண அலகு

இனக்கலவரம்

மனித இனங்களுக்கிடையிலான சண்டை

இனச்சுத்திகரிப்பு

ஒரு இனக் குழுமத்தவரை படுகொலை செய்வது மற்றும் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து துரத்தி அடிப்பது போன்ற செயற்பாடுகள் மூலம் அவர்களை இல்லாதொழித்தல்

இன சனம்

உறவினர்

இனத்தவர்

உறவினர்

இனவரி

வெவ்வேறு தொழில்களைப் புரிந்த ஒவ்வொரு சாதியினரிடம் இருந்தும் அரசன் மொத்தமாக பெற்றதொரு வரி