இ - வரிசை 103 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இழுத்தெறிதல் | மிக விரைவாக கருமம் ஒன்றை மேற்கொள்ளல் |
இழுப்பாணி | கலப்பையை நுகத்தில் பூட்ட பயன்படுத்தும் பெரியதொரு ஆணி |
இழுத்தாணி சப்பாணி | செயல் ஒன்றினை மெதுவாகவும் இடைவெளி பல விட்டும் பிற்போட்டும் செய்யும் பண்பினை கொண்ட நபர் |
இழுபடுதல் | முறையாக பயன்படுத்தப்படாமல் அநியாயமாகிறது என்ற கருத்து |
இழுபறிப்படுதல் | முரண்படுதல் |
இழுபாடு | இணக்கமற்ற நிலை, முடிவுக்கு வராமல் இருத்தல் |
இழுவிண்டல் | விடயம் ஒன்று நீண்டகாலமாக தீர்வு காணப்படாது இருத்தல் |
இழுவைக் கயிறு | பயிர்களை நிரையாக நாடும் பொருட்டு நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் இடப் பயன்படுத்தப்படும் நீண்ட தேடா கயிறு |
இழைக்கட்டுதல் | தனக்கு தீங்கு செய்த ஒருவருக்கு கேடு விளைய வேண்டி கடவுள் சிலை முதலியவற்றில் சீலை துண்டு அல்லது நூல் கட்டுதல் |
இழைத்தல் | ஓலை முதலியவற்றை கொண்டு பை, பாய் முதலியன பின்னுதல் |
இளக்கயிறு | வேலி வரிதல், கட்டுதல் முதலியவற்றிற்கு பயன்படும் தென்னம் தும்பினால் திரிக்கப்பட்ட மெல்லிய கயிறு |
இளக்களித்தல் | பொரித்த அப்பளம் முதலானவை மொருமொருப்பு தன்மையை இழத்தல் |
இளகுதல் | இரக்கம் கொள்ளுதல், ஈதல், தணிதல், மொருமொருப்பு தன்மையை இழத்தல் |
இளங்கண்டுப்பால் | கன்று ஈன்று சில காலமே ஆகிய பசுவிலிருந்து கறக்கப்படும் தடிப்பு குறைந்த பால் |
இளந்தாரி கோயில் | ஒரு சிறு தெய்வ வழிபாட்டு இந்து கோயில் |
இளநாக்கடித்தல் | ஒன்றைப்பற்றி, ஒருவரை பற்றி சற்று குறைத்து கூறல், உறுதியாக சொல்லாமல் மழுப்புதல் |
இளநீர்க் கோம்பை | இளநீர் குடித்த பின் மிஞ்சும் இளநீர் குடுவை |
இளமைபெயர்தல் | மனநிறைவு, சிறந்த உணவு முதலியவற்றினால் ஒருவர் தனது முன்னைய நிலையிலும் பார்க்க இளமையான தோற்றத்தை பெறுதல் |
இளவாளித்தல் | பொரித்த அப்பளம் போன்றவை ஈரப்பதன் காரணமாக மொருமொருப்பினை இழத்தல் |
இளைப்பாறல் | வேலையில் இருந்து ஓய்வு பெறல் |