இ - வரிசை 102 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இருத்தினி

மிகவும் சொற்பம்

இருந்துக்கோ

இருந்து கொள்

இருநாற்சார் வீடு

நாற்சார் வீடமைப்பில் ஒரு வகை

இருப்புக் கொள்ளாது

ஆர்வம் மேலிட்டு காணப்படும் என்ற குறிப்பு

இருப்புத் தொட்டில்

குழந்தைகள் பாதுகாப்பாக நிற்க மற்றும் இருக்க பயன்படும் மரத்தொட்டில்

இரும்புச் சட்டி

வாணலி (தமிழ்நாடு), தாச்சி, இருபக்கமும் கைப்பிடியுடன் கூடிய இரும்பிலான சமையல் பாத்திரம்

இருவாட்டித் தறை

இரண்டு வகை மண்கள் கலந்து காணப்படும் பயிர் நிலம்

இருவாட்டி மண்

இரண்டு வகை மண்கள் கலந்து காணப்படும் மண்

இல்லாட்டால்

இல்லாவிடில்

இல்லாததும் பொல்லாததும் கூறல்

பொய்யாகவும் தகாதவற்றையும் பேசுதல்

இல்லாமத்துப் போவான்

இறந்து போவான் என்ற கருத்தில் ஆன திட்டுதற் குறிப்பு

இலாச்சம்

பத்துப்பேர் அல்லது 2730 சதுர அடி கொண்ட ஒரு நில அளவு

இலுப்பைக் கொட்டை கட்டுதல்

நீள் வட்டத்தின் நடுவில் வரிசையாக இலுப்பை கொட்டைகளை வைத்து வட்டத்திற்கு வெளியே அவை செல்லக்கூடியவாறு சிறிய தட்டையான கல்லால் அடித்து விளையாடும் ஒரு கிராமிய விளையாட்டு

இலையான் கலைத்தல்

தொழில் இடத்தில் போதிய அளவு வேலை வியாபாரம் என்பன இல்லாமையினால் பெரும்பகுதி நேரம் சும்மா இருத்தல்

இவளவை

இந்தப் பெண்கள்

இவோ

இந்த பெண்

இழுத்தடித்தல்

காலதாமதம் செய்தல்

இழுத்துக் கொண்டு போதல்

விரைவாக வாகனத்தைச் செலுத்தி கொண்டு போதல்

இழுத்துப்பறித்தல்

பொதிகள், குழந்தைகள் முதலியோரை கஷ்டப்பட்டுக் கொண்டு செல்லல்

இழுத்துவிடல்

அடித்தல், கையூட்டு கொடுத்தல், விருப்பம் இல்லாத விடயமொன்றில் ஒருவரை நிர்ப்பந்தப்படுத்தி ஈடுபட வைத்தல்