இ - வரிசை 101 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இரண்டு நேர பாடசாலை

காலையும் மதிய இடைவேளை விட்டு அதற்குப் பின்னரும் நடைபெறும் பாடசாலை

இரண்டு நேரம்

காலை முதல் பின்னேரம் வரை

இரணியன்கள்

கொடுமைக் காரர்கள்

இரணியன் பட்ட நேரம்

விஷ்ணு இரணியனைக் கொன்ற நேரமாகிய பொழுது படும் நேரம்

இரணைப் பிள்ளை

இரட்டைக் குழந்தைகள்

இரத்த உருத்து

திருமண வலியால் வந்தது அல்லாத நெருங்கிய உறவினரோடான உறவு

இரத்தக் கொதி

உணர்ச்சி வசப்படல், அந்தரப்படல், இளமைத் துடிப்பினால் ஏற்படும் மிதமிஞ்சிய காம உணர்வு

இரத்தப் பொட்டு

கையில் பிளேடால் கீறி வரும் இரத்தத்தை கொண்டு அரசியல்வாதிகள் முதலியோருக்கு வைக்கும் பொட்டு

இரத்தினச் சுருக்கம்

இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் மிகச்சிறப்பாக சுருக்கி கூறல்

இரதை

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமானதொரு வாழை இனம்

இரவல் சோறு தின்னி

தன் காலில் நிற்காமல் மற்றவர்களை சார்ந்து வாழும் நபர்

இரன்

இரு என்று பணித்தல், சற்று பொறு என்று குறிப்பு

இராசவள்ளிக்கிழங்கு

பெருவள்ளிக்கிழங்கு (தமிழ் நாடு) அவித்து தேங்காய்ப்பால் சீனி சேர்த்து உண்ணும் இனிப்பு சுவை கொண்ட ஊதா நிற கிழங்கு

இராவும் போலும்

இரவும் பகலும்

இரான்

இருக்கமாட்டான்

இரிசல்

பிளவு

இருக்கப்பட்ட ஆக்கள்

(ஒருவர் இறந்ததினால் அல்லது தனது கடமையில் இருந்து விலகிச் சென்ற நிலையில்), இருப்பவர்கள் அசௌகரியங்களிற்கு ஆளாக வேண்டி ஏற்படும் என்ற சலிப்பு குறிப்பு

இருக்கிறம்

குசலம் விசாரிக்கும் போது பொதுவாகக் கூறப்படும் பதில்

இரு சாதி மண்

இரண்டு வகை மண்கள் சேர்ந்து காணப்படும் மண்

இருத்தி எழுப்புதல்

சிறுவர்களை பராமரித்தல் முதலியன தொடர்பில் அதிக வேலைகள் செய்யும் படி வற்புறுத்தப்படல்