இ - வரிசை 100 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இத்தவரை | இந்நேரம் வரை |
இத்தறுதி | இந்த நேரத்தில் |
இத்தினி | இம்மியளவு |
இத்துப்போதல் | இற்றுப்போதல், நைந்து போதல் |
இதம்பதமாய் | மிக பொருத்தப்பாடாய் |
இதாலை | இந்த பக்கத்தால் |
இந்தாத்தான் | மிகவிரைவில் |
இந்தாபின்ன | ஏறத்தாள முடிவாகி |
இப்ப | இப்பொழுது, தற்போது |
இப்பத்தை | இந்தக்காலத்து, இத்தலைமுறை |
இப்பான் | இப்பத்தான் |
இம்மை மறுமை | மிகவும் மோசமான |
இமாலயத் தவறு | பெருந்தவறு |
இயக்கப் பெடியள் | ஈழ விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் |
இயங்குதல் | வேண்டும் என்று மெதுவாக செயற்படல். இயலாத நிலையிலும் முயன்று செயற்படல் |
இயண்டது | இயலக் கூடியது |
இயத்து | பாத்திரம் |
இரண்டாக்கி தா | காசை சிறு பண அலகுகளாக மாற்றும் போது இரண்டு சம அலகுகளாக மாற்றி தருதல் |
இரண்டு கொம்பு தாலி | இரண்டு கொம்புகளை கொண்ட தாலி |
இரண்டு தோணியில் கால் வைத்தல் | இரண்டு கருமங்களை ஒன்றாக செய்வதனால் இரண்டும் கெட்டுவிடும் என்ற கருத்து |