இ - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இதோபதேசம் | பக்குவமான போதனை |
இந்த | (இடத்தைக் குறிக்கையில்) அருகில் அல்லது முன் இருக்கிற, (காலத்தைக் குறிக்கையில்) தற்போதைய |
இந்தாருங்கள் | மரியாதைக்குரிய ஒருவரை அழைக்கும்போது அல்லது ஒன்றை அவரிடம் தரும்போது அவர் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பப் பயன்படுத்தும் ஒரு இடைச்சொல் |
இந்தி | இந்தியாவில் வடமாநிலங்களில் பேசப்படும் ஒரு மொழி |
இந்திய | இந்தியாவைச் சேர்ந்த |
இந்திய அயல்நாட்டுப் பணி | பிற நாடுகளுடனான உரவு குறித்த பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசுப் பணிப் பிரிவு |
இந்திய ஆட்சிப்பணி | (இந்தியாவில்) உள்நாட்டில் அரசு நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசின் பணிப் பிரிவு |
இந்தியக் காவல் பணி | உள்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசின் பணிப் பிரிவு |
இந்திய தேசிய இராணுவம் | ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடுவதற்கு பர்மா,சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்களால் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் உருவான படை |
இந்தியர் | இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர் |
இந்தியா | வடக்கே இமய மலையையும் தெற்கே இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாகக் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று |
இந்திரபோகம் | அனைத்து வசதிகளும் நிறைந்த சுகம் |
இந்திரஜாலம் | மயங்கவைப்பதும் நம்பமுடியாததுமான தோற்றம் |
இந்திரியம் | ஐம்புலனுக்கு உரிய பொறி |
இந்து | ஒரு மதம் |
இந்துத்துவம் | இந்தியாவை இந்துக்களின் நாடாகக் கொண்டு அது ஒரே வரளாறும் பண்பாடும் கொண்டது என்ற கருத்தை வலியுறுத்தும் அரசியல் கொள்கை |
இந்துப்பு | சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் (சில வகை நிலங்களில் கிடைக்கும் ) கனிம உப்பு |
இந்நாள் | தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் |
இந்நேரம் | (பேசிக் கொண்டிருக்கும் போது குறிப்பிடுகிற) இந்த நேரம்,இப்போது |
இப்படி | (சுட்டிக்காட்டும்)இந்த முறையில் |