இ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இளங்கோ | இளவரசன், தமிழுக்காக அரியாசனம் துறந்த தியாகி |
இயம்பு | கூறுதல்,சொல்லுதல் |
இ | இந்த |
இஃது | இது |
இக்கட்டு | நெருக்கடி |
இகம் | (மத நம்பிக்கைகளில் படி) இந்த உலக வாழ்வு,இம்மை |
இகலோகம் | (நாம் வாழும்) இந்த உலகம்,பூமி |
இகழ் | (ஒருவரை அல்லது ஒன்றை) அவமதித்தோ அல்லது கேலியாகவோ பேசுதல் |
இகழ்ச்சி | ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலிசெய்யும் செயல் |
இங்கனம் | இங்ஙனம்,இப்படிக்கு, இப்படி,இவ்வாறு,இவ்விதம் |
இங்காலே | இந்தப்பக்கம் |
இங்கிதம் | சூழ்நிலைக்கும் பிறர் இயல்புக்கும் ஏற்ற இணக்கம், நாசூக்கு |
இங்கு | இங்கே |
இங்குமங்கும் | அங்குமிங்கும் |
இச்சகம் | (காரியம் நிறைவேறுவதற்காகச் செய்யும்)போலியான புகழ்ச்சி |
இச்சை | (ஒன்றை அடைய வேண்டும் என்பதில் ஒருவர் காட்டும்) தீவிர விருப்பம் |
இசகுபிசகாக | விரும்பத்தகாத விதத்தில்,எதிர்பாராமல்,தவறாக,தகாதவாறு |
இசிவு | திடீரென ஏற்படுவதும் வலியைத் தருவதுமான தசை இறுக்கம் |
இசை | மனதை, இசைய வைப்பது இசையாகிறது. |
இசை | உடன்படுதல் |