ஆ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆத்மா | ஆன்மா |
ஆத்மார்த்தம் | எந்த விசயத்தையும் மனம்விட்டுப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நெருகம் |
ஆத்மீகம் | ஆன்மீகம் |
ஆதங்கப்படு | மனக்குறையை வெளிப்படுத்துதல் அல்லது வருத்தப்படுதல் |
ஆதங்கம் | மனக்குறை |
ஆதர்சம் | உன்னதமான உதாரணமாகக் கொள்ளப்படுவது |
ஆதரவாளர் | ஆதரவு தருபவர் |
ஆதரவு | ஒத்துழைப்பு |
ஆதரவு விலை | அறிவித்த விலைக்குக் கீழே விலை இறங்கினால் அறிவித்த விலைக்கே குறிப்பிட்ட விலைப்பொருளை தான் வாங்கிக்கொள்வதாக அரசு ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் விலை |
ஆதரி | ஒத்துழைப்பு வழங்குதல் |
ஆதலால் | ஆகையால் என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்பு படுத்தும் இடைச்சொல் |
ஆதவன் | பிரகாசம் என்பதுதான் இதன் பொருள் |
ஆதனம் | சொத்து |
ஆதாம் | கடவுள் படைத்த முதல் மனிதன் என்று விவிலியத்தில் கூறப்படும் மனிதன் |
ஆதாயம் | லாபம் |
ஆதாரக்கல்வி | அடிப்படைக் கல்வி |
ஆதாரபூர்வமாக | ஆதாரபூர்வமான,தகுந்த சான்றுகளுடன்,தகுந்த சான்றுகளுடன் கூடிய |
ஆதாரம் | சான்று |
ஆதாரம் | மூலாதாரம் |
ஆதி | தொடக்க காலம்,முதல்,தொடக்கம் அறியப்படா முடியாத பழமை,அடிப்படை |