ஆ - வரிசை 8 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆணழகன் | அழகான ஆண்,திரண்ட உடற்கட்டு உடைய ஆண் |
ஆணாதிக்கம் | பெண்களைவிட ஆண்கள் மேலானவர்கள் ,பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற ஆண்களின் ஆதிக்க மனப்போக்கு |
ஆணி | சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியான தட்டையான தலைப்பகமும் கூரிய முனையும் உடைய உலோக கம்பி |
ஆணித்தரமாக | அழுத்தம் திருத்தமாக,உறுதியாக |
ஆணிவேர் | (சிலவகைத் தாவரங்களில்) தண்டின் அல்லது அடிப்பாகத்தின் தொடர்ச்சியாக மண்ணில் நேராக இறங்கும் தாவரத்தை உறுதியாக நிலை நிறுத்தும் பெரிய வேர் |
ஆணுறுப்பு | விரைப்பையையும் ஆண்குறியையும் உள்ளடக்கிய பிறப்புறுப்பு |
ஆணை | கட்டளை |
ஆணையம் | குறிப்பிட்ட பொறுப்புகளைச் சுதந்திரமாக நிர்வகிக்க அல்லது குறிப்பிட்ட செயலைச் செய்து முடிக்க அரசால் நியமிக்கப்பட்ட குழு |
ஆணையர் | குறிப்பிட்ட சில அரசுத் துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரி |
ஆத்தாள் | அம்மா |
ஆத்திகம் | கடவுள் உண்டு என்று நம்பும் கொள்கை |
ஆத்திகன் | கடவுள் உண்டு என்ற கொள்கை உடையவர் |
ஆத்திரப்படு | மனம் கொதித்தல் |
ஆத்திரம் | மனக்கொதிப்பு |
ஆத்துப்பற | சிரமப்படுதல்,கஷ்டப்படுதல் |
ஆத்மசுத்தி | மனத் தூய்மை |
ஆத்ம ஞானம் | தன்னைப் பற்றி அல்லது ஆன்மாவைப் பற்றி உணர்ந்து அறிவது |
ஆத்மஞானி | தன்னைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் உணர்ந்து அறிந்தவர் |
ஆத்ம நண்பன் | உயிர் நண்பன் |
ஆத்ம பரிசோதனை | (ஒருவர்) தனது சிந்தனை,செயல்,வாழ்க்கை முறை போன்றவற்றை தீவிரமாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளும் முயற்சி |