ஆ - வரிசை 7 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆண்

உயிரினங்களில் கருத்தரிக்காததும், கருத்தரிக்கச் செய்யும் திறன் உடையதுமான இனம்
ஆண்பால் பொது
ஆண்மை
தலைம
சேனா வீரன்

ஆண் அறுவைச் சிகிச்சை

ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை

ஆண்குறி

உடலுறவுக்கும்,சிறுநீர் கழிக்கவும் பயன்படும் ஆணின் உடல் உறுப்பு

ஆண்டவன்

இறைவன்
(நம்மை ஆள்பவனான) கடவுள்

ஆண்டாண்டு காலமாக

காலம் காலமாக

ஆண்டான்

(பெரும்பாலும் பண்ணை நிர்வாகத்தில்)வேலையாட்களால் தங்கள் முதலாளி என்று அறியப்படுபவர்

ஆண்டி

(பெரும்பாலும்)தலையை மழித்து கழுத்தில் உத்திராட்சம் கட்டி வீடுகளில் பிச்சை பெற்று வாழ்பவர்
பரதேசி
செவத் துறவி
பண்டாரம்(பெண்பால் - ஆண்டிச்சி)

ஆண்டு

வருடம்
பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவு

ஆண்டுகொள்

ஆட்கொள்ளுதல்

ஆண்டுத்தேர்வு

கல்வியாண்டின் முடிவில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு

ஆண்டு வளையம்

மரவளையம்,ஆண்டுக்கு ஒன்று என்ற விதத்தில் தோன்றி மரத்தின் வயதை நிணயிக்க உதவும் வளையம் போன்ற கோடு

ஆண்டுவிழா

ஒரு அமைப்பு போன்றவை தொடங்கிய அல்லது முக்கியமான ஒரு நிகழ்வு நிகழ்ந்த அதே நாளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழா

ஆண்டை

தங்கள் எஜமானரைக் குறிப்பிட விவசாயத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் சொல்
அவ்விடம்

ஆண் பனை

ஆண் பூக்களை மட்டுமே கொண்ட,காய்க்காத பனை மரம்

ஆண்பால்

ஐம்பால்களுல் ஆணைக் குறிப்பது
ஆண் இனம்
(இலக்கணத்தில்) உயர்திணையில் ஆண் இன ஒருமைப் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்

ஆண்பிள்ளை

1.குழந்தைகளுள் ஆண் 2.வயது வந்த ஆண்

ஆண்பிள்ளைச் சிங்கம்

(கேலியாக) வீரம் படைத்த ஆண்

ஆண்மை

ஆணின் இயல்பாக அல்லது தன்மையாக (மரபு ரீதியாக) கூறப்படும் உடல் வலிமை,பலம் போன்றவை
(ஆணின்) உடலுறவு கொள்ள இயலும் அல்லது கருத்தரிக செய்யும் தன்மை,வீரியம்

ஆணம்

குழம்பு

ஆணவம்

இறுமாப்பு
செருக்கு
கர்வம்