ஆ - வரிசை 66 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆள்பிடித்தல்

சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள ஒருவரை அவற்றிலும் குறைந்த அந்தஸ்தில் உள்ள இன்னொருவர் திருமணம் செய்யும் நோக்கில் பழகுதல் என்ற கருத்து

ஆள் முடிஞ்சுது

ஆள் இறந்து விட்டார், மீளமுடியாத பிரச்சனைக்குள் ஒருவர் மாட்டிக் கொண்டார் என்ற கருத்து

ஆளணி

குறித்த வேலையினை ஆற்றுவதற்குரிய ஆட்கள்

ஆளாகுதல்

ஒருவர் நல்ல அந்தஸ்திற்கு வருதல்

ஆளுக்காள்

ஒவ்வொருவரும், ஒருவருக்கொருவர்

ஆளும் பேருமா

ஆட்கள் பலருடன் சற்று மிடுக்காக

ஆளையாள் தின்னுதல்

போட்டி, பொறாமை முதலியனவற்றினால் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுதல்

ஆற்றா

யாரடா அது? என்று கோபமாக குறிக்கப்படுபவரை தரம் குறைத்து விளித்தல்

ஆற்றை

யாருடையது

ஆற்றையேன்

பிறருடையது

ஆற்றையோ

யாருடையதோ, பிறருடையது

ஆறவிடுதல்

விடயம் ஒன்று தொடர்பில் நிலவும் கோபம் தணியும் வரை அதனை ஒத்திப்போடுதல்

ஆறியமர்

ஓய்வாக இருத்தல்

ஆறுமூலைப் பட்டை

துலாவினால் நீர் இறைப்பதற்கு பயன்படும் ஆறு மூலைகள் வைத்து இழைக்கப்பட்ட பனை ஓலை பட்டை

ஆன

ஆற்றலுள்ள

ஆனமான

தகுதியான, சரியான

ஆனவாயில்

நல்ல முறையான, ஒழுங்கான (சாப்பாடு)

ஆனா

ஆனால்

ஆனா ஆவன்னா

ஒன்றை பற்றிய அடிப்படை அறிவு

ஆனாப் படியாத ஆக்கள்

படிப்பறிவு இல்லாதவர்கள் என்ற குறிப்பு